Ad

Photobucket
 
சனி, 16 ஜூன், 2012

சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்!

கம்யூனிகேசன்தான் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அலுவலகமோ குடும்பமோ இரண்டிலுமே சரியான கம்யூனிகேசன் இல்லையென்றால் ஒற்றுமையோ, சந்தோசமோ இருக்காது. ஏனெனில் தங்களின் கருத்துக்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது. சரியான கம்யூனிகேசன் இல்லை என்றால் கணவன் மனைவி இடையே கூட இடைவெளி ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

உங்களின் மகிழ்ச்சி உங்களின் தேவை அனைத்தையும் உங்களின் ஒருவார்த்தைதான் வெளிப்படுத்தும். நான் உன்னை நேசிக்கிறேன் என்று உங்கள் துணையைப் பார்த்து கூறும் ஒரு வார்த்தைதான் ஓராயிரம் நம்பிக்கையை உங்கள் மீது ஏற்படுத்தும். உன் அன்பை புரிந்து கொண்டேன், எனக்கு நீ வேண்டும் என்று நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் எண்ணங்கள் உங்களைப் பற்றி சரியான அளவில் உங்கள் துணைக்கு உணர்த்தும்.

துணையை கவனியுங்கள்

நாம் கூறும் வார்த்தைகளை பிறர் கவனிக்க வேண்டும் என்று நினைப்பதைப்போல நம் துணை கூறும் வார்த்தைகளையும் நாம் காது கொடுத்து கேட்கவேண்டும். உங்களுடைய இடைச்செருகலான வார்த்தைகள் எதுவும் அதில் இருக்க கூடாது. அவர் பேசி முடித்து நீங்க என்ன நினைக்கறீங்க என்று கேட்ட பின்னர் உங்கள் கருத்தை தெரிவியுங்கள் அதுதான் சரியான தகவல் தொடர்பு. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அதை சரியாக கவனிக்காமல் விட்டாலோ காது கொடுத்து கேட்காமல் விட்டாலோ சிக்கல்தான்.

தினசரியும் கேளுங்கள்

உங்களின் செயல்பாடுகள் உங்கள் துணைக்கு திருப்திகரமானதாக இருக்கிறதா என்பதை அடிக்கடி கேளுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் துணைக்கு பிடிக்காமல் போகலாம். உங்களின் கருத்துக்களில், செயல்களில் உடன்பாடு இல்லாமலேயே அவர் ஒத்துக்கொள்ள நேரிடலாம். எனவே எதற்கும் ஒரு வார்த்தை கேளுங்கள். நான் சொல்றது சரியா? உனக்கு பிடிச்சிருக்கா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நேர்மறையாக எண்ணுங்கள்

உங்களைப் பற்றி உங்கள் துணை கூறுவதை எதிரான கருத்தாக நினைக்காமல் நேர்மறையாக எண்ணுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு சிக்கல்கள் எழாது. நம் குடும்பத்தின் நல்லதிற்காகத்தான் நம் மனைவி / கணவர் கூறுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் போது மனது நோகாத அளவிற்கு தெளிவாக எடுத்துக்கூறவேண்டும்.

சுதந்திரமான உணர்வு

சில நேரங்களில் நாம் கூறும் கருத்துக்களே நமக்கு எதிராக திரும்பும். எனவே ஒவ்வொரு வார்த்தையையும் சரியான வகையில் நாம் உபயோகிக்க வேண்டும். நான் சொல்வதுதான் சரி அதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டளையிடுவதை விட இது என் கருத்துதான் இதன்படி நடந்துதான் ஆகவேண்டும் என்றில்லை அதே சமயம் உனக்கு எது சரியானதான தெரிகிறதோ அதை தெரிவிக்கலாம் என்று உங்கள் துணைக்கு சுதந்திரம் அளியுங்கள்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.