Ad

Photobucket
 
செவ்வாய், 19 ஜூன், 2012

வாடும் செடியை எப்படி காப்பாற்றலாம்...???


வீட்டில் தோட்டம் வைக்கும் அனைவரும் தாம் நட்டு வைக்கும் செடியை அழகாக பத்திரமாகத் தான் பார்த்துக் கொள்கிறார்கள். இருப்பினும் அவை வாடி இறந்து விடுகின்றன. சொல்லப்போனால் தோட்டத்தை பராமரித்து வரும் சில தோட்டக்காரர்களுக்குக் கூட தெரியாது. ஆனால் அனுபவமுள்ள ஒரு நல்ல தோட்டக்காரருக்கு செடிகள் ஏன் வாடி இறந்து விடுகின்றன என்று நன்றாக தெரியும். இத்தகைய வாடும் செடிகளை பாதுகாக்க ஒரு சில வழிகளை அத்தகைய அனுபவசாலிகள் கூறியிருக்கின்றனர். அது என்னவென்று கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

செடியைக் காப்பாற்ற சில வழிகள்...

1. பொதுவாக செடிகள் வாடுவதற்கு முதற்காரணம் போதிய தண்ணீர் இல்லாததே ஆகும். எல்லா செடிகளுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீரானது இருக்க வேண்டும். அப்படி தண்ணீர் இல்லாமல் குறைவாக இருந்தால், ஈரப்பசை இல்லாமல் அது வறண்டுவிடும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக் கூடாது. வாடும் நிலையில் இருக்கும் செடி இருக்கும் தரையை முழுவதுமாக நனைக்க வேண்டும் மற்றும் இலைகளின் மீது நீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை செய்தால் செடியானது வாடாமல் இருக்கும்.

2. செடி இருக்கும் நிலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தோ அல்லது மழை அதிகமாக பெய்ததால் நீரானது தேங்கி இருந்து, செடி நிலையில்லாமல் இருந்தால், அந்த செடியை சூரிய வெளிச்சத்திலோ அல்லது செடியை புதிதான வேறு இடத்திலோ வைக்க வேண்டும்.

3. செடியின் ஏதேனும் ஒரு பகுதி நோயால் பாதிக்கப்பட்டாலும், அந்த பகுதியை அகற்றிவிட வேண்டும். சில நேரங்களில் இலையின் அமைப்போ அல்லது உருவமோ பூச்சி அரித்ததால் மாறி இருக்கும். அப்போது அதனை யோசிக்காமல் அகற்றிவிட வேண்டும். இப்போது அனைத்து இலைகளும் பாதிக்கப்பட்டிருந்தால் அனைத்தையும் அகற்றிவிடலாம். ஏனெனில் அதன் தண்டு ஆரோக்கியமாக இருப்பதால் அது நன்கு வளரும். செடியின் வேர் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் தான் செடிக்கு ஏதேனும் உரம் தேவைப்படும். உரம் போட்டும் செடியானது செழிப்பாக இல்லையென்றால் அதனை அகற்றி தான் ஆக வேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் மற்ற செடிக்கு பரவும்.

4. செடியானது அழியாமல் இருக்க, நோயால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டுப் பகுதி ஆரோக்கியமாக இருந்தால், அதன் தண்டை எடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கலாம். சில செடிகள் வேர் இல்லாமல் வளராது, அத்தகைய செடிகளை அதன் ஆரோக்கியமான வேரை எடுத்து வைத்து வளர்க்கலாம்.

5. சில செடிகள் அதிக வெப்பத்தினால் வாடும் நிலையில் இருக்கும். அதற்கு அறிகுறியாக அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆகவே அப்போது அதனை வீட்டின் உட்பகுதியில் லைட் வெளிச்சத்தில் வைக்கவும். பின் சிறிது நாட்கள் கழித்து, அதனை நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைத்து வளர்க்கவும்.

இவ்வாறெல்லாம் செடிகளை பாதுகாத்து பராமரித்தால் செடியானது வாடாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.