Ad

Photobucket
 
வியாழன், 21 ஜூன், 2012

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?


அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான்.

ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்பவும் "கடுகடு சிடுசிடு"வேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.

ஆனால் அவர்களை சந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் "குறும்பும் நகைச்சுவையும் செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.

இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன். நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார்.

அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.என்ன ஆண்களே நீங்கள் எப்படி?
1 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.