Ad

Photobucket
 
புதன், 27 ஜூன், 2012

விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு நீதிமன்றத்தால் ஆப்பு!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

என்ன கொடும சரவணா!!!!
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.