Ad

Photobucket
 
சனி, 23 ஜூன், 2012

காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாதா!!!

எடை குறைக்க வேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம்.

 ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இப்போது இருந்து உண்ணும் பழக்கத்தை கொள்ளுங்கள். மேலும் அப்படி ஏன் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று பல காரணமும் இருக்கிறது. அது என்னவென்று படித்துப் பாருங்கள்...

காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன ஏற்படும்?...

1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்கியானது தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவே சிறந்தது.

2. சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில் கொஞ்சம் உண்பர். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக உண்ண முடியாது, அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட உண்ணமாட்டார்கள். ஆகவே இதனால் எடை தான் கூடுமே தவிர எடை குறையாது.

3. மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.

4. வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆகவே காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

5. காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும்.

6. மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள் நடந்து கொள்வதையே பழகுவார்கள். இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள். பின் அவர்கள் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே பின்பற்றுவார்கள்.

7. காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும்.

8. வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அகற்கு காரணம் வேலைப்பளு அல்ல. அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும்.
ஆகவே காலை உணவை சாப்பிடுங்க!!! சந்தோஷமா அன்றைய தினத்தை துவங்குங்க!!!
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.