Ad

Photobucket
 
வெள்ளி, 20 ஜூலை, 2012

26 ஆண்டுகளில் முதல் முதலாக நஷ்டத்தை சந்தித்த மைக்ரோசாப்ட்!

லாஸ் ஏஞ்செலஸ்: கடந்த 26 ஆண்டுகளில் முதல் முதலாக நஷ்டம் அடைந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

2007ம் ஆண்டில் ரூ. 35,000 கோடியைத் தந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய இணையதள விளம்பர நிறுவனமான aQuantive பெரும் நஷ்டத்தையே தந்துள்ளது. aQuantive நிறுவனத்தை வாங்கியதிலும் அதில் செய்யப்பட்ட முதலீடுகளும் நஷ்டத்தையே தந்துள்ளன.

இந்த நஷ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது தான் தனது வரவு-செலவுக் கணக்கில் முழுமையாக சேர்த்து கணக்கை நேர் செய்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் மாதத்தில்) மைக்ரோசாப்ட்டின் கணக்கில் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதாவது மைக்ரோசாப்ட்டின் பங்குகள் 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளன.

இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 26 வருடங்களில் சந்திக்கும் முதல் நஷ்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் சொன்னால் இது இந்த காலாண்டில் ஏற்பட்ட நஷ்டமே அல்ல. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டத்தை சேர்த்து ஒரே காலாண்டில் அறிவித்து கணக்கை நேர் செய்துள்ளது மைக்ரோசாப்ட்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.