Ad

Photobucket
 
புதன், 4 ஜூலை, 2012

காதல் தோல்வியால் உலகிலேயே பருமனானவராக மாறிய நபர்! (படங்கள் இணைப்பு)

தனது பாரிய உடல் நிறைக்கு காதல் தோல்வியே காரணமென உலகின் மிகவும் பருமனான நபராக “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பிரித்தானியாவைச் சேர்ந்த போல் மாஸன் (50 வயது) தெரிவித்தார்.

காதல் தோல்வியால் இராட்சத உருவத்தைப் பெற்ற அவர், தற்போது பிறிதொரு பெண் மீது ஏற்பட்ட காதலால் நிறையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் 980 இறாத்தல் நிறையுடன் நடக்க முடியாது சக்கர நாற்காலியை தஞ்சமடைந்திருந்த அவர், தனது நிறையை 518 இறாத்தலாக குறைத்து சக்கர நாற்காலியை விட்டு எழுந்து நடமாடும் வல்லமையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தான் 21 வயதாக இருந்த போது தன்னை விட 18 வயது கூடிய பெண்ணொருவரை (39 வயது) சந்தித்து காதல் கொண்டதாக தெரிவித்த போல் மாஸன், ““நான் அவளை சார் என செல்லமாக அழைப்பது வழக்கம். என் நினைவுகள் ழுவதும் அவளே நிறைந்திருந்தாள். அவள் என் வாழ்க்கை முழுவதும் துணை வருவாள் என நம்பியிருந்தேன்'' என்று கூறினார்.

““அவளுக்கு ஒரு வீடு இருந்தது. நானும் அவளும் அங்கேயே வசித்து வந்தோம். நான் அந்த வீட்டை மெருகுபடுத்த பண உதவி செய்தேன். ஆனால் அவள் எனது கனவுகள் அனைத்தையும் ஒருநாள் பொய்யாக்குவாள் என நான் ஒருபோதும் எதிர் பார்த்திருக்கவில்லை'' என போல் மாஸன் மேலும் தெரிவித்தார்.

““1986 ஆம் ஆண்டில் எனக்கு 26 வயதாக இருந்த போது, அவளுக்கு பிறிதொரு இளைஞனுடன் காதல் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை அவளிடம் நேரடியாகவே கேட்டேன்.

ஆனால் அவள் அதற்கு எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் அந்த இளைஞனையே திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு போய்விட்டாள்'' என தெரிவித்த போல் மாஸன், காதல் தோல்வியை மறக்க உணவுக்கு அடிமையானதாக கூறினார்.

““எனது உடைந்து போன இதயத்தை சாந்தப்படுத்த எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை. உணவு உண்பதன் மூலமாவது மனதை அமைதிப்படுத்த முடியுமா என முயற்சித்தேன். அதன் விளைவாக 24 மணி நேரம் உணவு உண்ணும் பழக்கத்திற்கு அடிமையானேன். இதனால் எனது நிறை வேகமாக அதிகரித்து உலகின் மிகவும் பருமனான மனிதனாக மாறினேன்'' என்று மாஸன் போல் தெரிவித்தார்.

““நான் அச்சமயம் நாளொன்றுக்கு 24 மணி நேரம் என்ற வகையில் தினசரி உணவு உண்டு வந்தேன். இந்த உணவு உண்ணும் பழக்கத்தால் இரவு நேரத்தில் உறங்கக்கூட முடியாது நான் சிரமப்பட்டு வந்தேன்'' என அவர் கூறினார்.
2006 ஆம் ஆண்டு போல் மாஸனின் அளவுக்கதிகமான நிறை காரணமாக அவர் தங்குவதற்கு பாரிய படுக்கையறையுடன் கூடிய விசேட பங்களாவை அமைக்க நேர்ந்தது.

இந்நிலையில் அவர் தனது நிறையில் குறைந்தது 280 இறாத்தல்களையாவது குறைக்காவிடில், அவர் இரு வருடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் அவருக்கு நாள் குறித்தனர்.

இதனையடுத்து 2009 ஆம் ஆண்டில் அவரது வயிற்றின் அளவைக் குறைப்பதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

““எனது துன்பகரமான வாழ்விலும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளே எனது நிறையை குறைக்க எனக்கு தூண்டுதலாக இருந்தாள். அவளும் என்னைப் போல் ஒழுங்கீனமான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளாள். அவளுக்கு மகன் ஒருவன் இருக்கிறான். எனக்கு ஆதரவளிக்க விரும்புவதாக அவள் தெரிவித்துள்ளாள்'' என்று கூறிய போல் மாஸன், ““அவள் மிகவும் கூச்ச சுபாவடையவள் என்பதால் அவளது பெயரை வெளியிட விரும்ப வில்லை.

ஒருநாள் எனது நிறையை சாதாரண அளவுக்கு குறைத்து அவளுடன் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.




0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.