Ad

Photobucket
 
சனி, 7 ஜூலை, 2012

“ஹலோ கலெக்டர் சாரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?“

ஒரு படத்தில் ஒயின்ஷாப்புக்குள் திருடப் போன வடிவேலு நன்றாக சரக்கடித்து விட்டு, ஒயின்ஷாப் ஓனருக்கு போன் போட்டு ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா... என ஆரம்பித்து டார்ச்சர் பண்ணுவார்.

கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் ஆகிவிட்டது தமிழ்நாட்டு நிலைமை. இனி 24 மணி நேரமும் பார்கள் திறந்திருக்கும், கூடுதல் விலைக்கு சரக்கு கிடைக்கும் என்றெல்லாம் அரசு குடியை தேசிய பழக்கமாக அறிவித்துவிட, குடிமகன்களுக்கு பெரும் நிம்மதி. நினைச்ச நேரத்தில் சரக்கடிக்கும் ஆனந்தம் அவர்களுக்கு.

ஆனால் அரசு அறிவித்த கூடுதல் நேரம் வரை சரக்கு கடை திறக்காததால் கடுப்பான ஒரு பொறுப்புள்ள குடிமகன் செய்ததைப் பாருங்கள்...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கே.கே நகர் பகுதியில் வசிப்பவர் நெல்சன் மாணிக்கம். இவர் புழுதிப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளிர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். இரவு 10.30 மணி அளவில் சென்றதால் டாஸ்மாக் பூட்டியிருந்தது. தனது நண்பர்களிடம் மாவட்ட ஆட்சியரின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு, 10.30 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டி இருக்கிறது. நாங்க எப்படி சார் சரக்கு வாங்குவது? 24 மணி நேரம் பார்னு சொன்னீங்க... பாரெல்லாம் மூடிக் கிடக்கு. இப்ப எப்படி சரக்கடிப்பது?" என்று ஆரம்பித்துள்ளார்.

உடனே கலெக்டர் போனை வைத்துவிட்டாராம். மீண்டும் போன் செய்து, ஹலோ கலெக்டர் சாரா என அவர் ஆரம்பிக்க, திருச்சி உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் கலெக்டர்.

உடனே ஐஎஸ் எஸ்ஐ. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், செல்போன் எண் மூலம் நெல்சன் மாணிக்கத்தை கண்டுபிடித்து அதிகாலை 4 மணிக்கு அவரை பிடித்துள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் நெல்சன் மாணிக்கத்திடம் போலீசார் விசாரித்தனர்.

அதற்கு அவர், "நான் என்ன சார் தப்பு பண்ணேன். மாவட்ட நிர்வாகம் கலெக்டர் பொறுப்பில்தானே இருக்கு. 11 மணி வரை திறந்திருக்கும்னு சொன்ன அரசு கடைகள் 10 மணிக்கே மூடிட்டாங்களேன்னு கலெக்டருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். இதில் என்ன தப்பிருக்கு?" என திருப்பிக் கேட்க, என்ன கேஸ் எழுதுவது என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

'ஹலோ கலெக்டர் சாரா... பதில் தெரியலேங்கிறதுக்காக அரசுக்கு வருவாய் தரும் குடிமகனை நீங்க கைது பண்ணச் சொன்னது சரிதானா!!'-ன்னு நாம கேட்கலை... வேற யாராவது போன் போடப் போறாங்க... பாத்துக்கங்க!!

அப்புறம்... நியாயமா இந்த போன்கால் போக வேண்டிய இடம் வேற ஒண்ணு.. குடிமகனுக்கு நம்பர் தெரியல போலிருருக்கு...!
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.