Ad

Photobucket
 
செவ்வாய், 31 ஜூலை, 2012

வியர்த்தால் இறந்துவிடும் அதிசய பாதிப்பு!

காலநிலை நன்றாகவும் வெப்பமாகவும் இருக்கையில் பிள்ளைகளுக்குத் தங்களது நண்பர்களுடன் எப்போதுமே ஓடுவதும் பாய்தலுந்தான் பொழுதுபோக்காக இருக்கும்.

ஆனால் இந்தச் சிறுவன் அவ்வாறு செய்தால் விரைவிலேயே இறந்துவிடுவான்.

3 வயதான பிரெட் ஜேம்ஸ் அரிதானதொரு பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

காரணம் இவனுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லையென்பதுதான்.
இதனால் பிரெட்டிற்கு அதிக வெப்பம் ஏற்பட்டால் அவனுக்கு மிக மோசமான வலிப்பு ஏற்பட்டுவிடும். பிரித்தானியா கோர்ண்வோலைச் சேர்ந்த இவனது பெற்றோர்கள் இவன் எப்போதுமே விசிறியுடனும் நீர் விசிறல்களையும் பனிக்கட்டிப் பைகளைப் பயன்படுத்துகின்றான் என்பதையும் உறுதிப்படுத்தவேண்டிய நிலையிலுள்ளனர்.

இதனால் அவனை எந்த நேரமும் கவனிக்க வேண்டிய நிலையில் அவனது பெற்றோர்கள் உள்ளனர்.

பிறந்தபோதே ஏதோவொரு பிரச்சினை அவனுக்கு இருந்ததைக் அவனது தாயார் உணர்ந்திருந்தார். பிறந்த மறுகணமே அவன் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டான். இவனுக்கு மூச்சுப் பிரச்சினை இருந்ததால் முதல் 4 நாட்களும் இவ்வாறு சுவாசங் கொடுக்கப்பட்டிருந்தான்.

400 பேர் வரையில் பிரித்தானியாவில் Ectodermal Dysplasia என்ற இவ்வாறான பலதரப்பட்ட அறிகுறிகள் கொண்ட பாதிப்புக் காணப்படுகின்றது. இதில் தலைமயிர் வெள்ளையாயிருத்தல், மூச்சுப் பிரச்சினைகள் மற்றும் வறண்ட தோல் என்பன காணப்படுகின்றன.

எனினும் இவை எல்லாவற்றிற்குமே தற்போது எந்தவிதமான குணப்படுத்தல்களும் காணப்படவில்லையெனலாம்.





0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.