Ad

Photobucket
 
சனி, 28 ஜூலை, 2012

சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய சூர்யா தம்பி?

சரவணன் என்ற வாலிபர் நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, சோனியா அகர்வாலின் தம்பி ஆகியோரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். யார் இந்த சரவணன் என்ற கேள்விக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி ஆகிய இருவரை கைகாட்டுகின்றனர் திரையுலகத்தை சார்ந்தவர்கள்.

அவர்கள் பெயரை உபயோகித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள பிரபல திரையரங்கில் சில நாட்கள் பணிபுரிந்த சரவணனைப் பற்றி அறிந்ததும் ஏகபோக மரியாதையுடன் வெளியே தள்ளியிருக்கின்றனர்திரையரங்கினர். சூர்யா, கார்த்தி பெயரை உபயோகித்து ஒருமுறை க்ளிக் ஆகிவிட்டதால் தொடர்ந்து எல்லா இடத்திலேயும் இதையே தொடர்ந்துகொண்டு வந்திருகிறார் சரவணன்.

வழக்கம் போல சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு என நன்றாக அனுபவித்து கொண்டிருந்த சரவணனுக்கு சூர்யா, கார்த்தி அலுவலகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது தான் அவரது நல்லநேரம்.

இன்னும் வசதியாகிப் போக ‘என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்’ என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து தனது நாடகத்தை அரங்கேற்றி வந்திருக்கிறார்.

இவரை நம்பியும் பலர் ஏமாந்து வந்த நிலையில், சமீபத்தில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சோனியா அகர்வாலை தற்செயலாக சந்தித்திருக்கிறார் சரவணன். சோனியா அகர்வாலிடம் சரவணன் ஏதோ தமிழில் கூறியிருக்கிறார்.

தமிழ் தெரியாத சோனியா அகர்வால் குழப்பமடைந்து சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை உலுக்கி எடுத்துவிட்டாராம். சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் நடு ஹோட்டலிலேயே சரவணனை கும்மியிருக்கிறார்கள்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்துவிட்டு சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு சில ஃபோன் கால்களிலும், குறுஞ்செய்திகளிலும் சண்டை சமரசமானதாகவும் தெரிகிறது. சரவணன் உண்மையிலேயே அவர்களது தம்பியா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.