Ad

Photobucket
 
திங்கள், 16 ஜூலை, 2012

ஒலிம்பிக் பீச் வாலிபால் பாக்கப் போறீங்களா?... அதை பாக்க முடியாது!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில், பெண்கள் பீச் வாலிபால் போட்டியை ரசிக்க காத்திருக்கும் ஆண்களுக்கு ஒரு கெட்ட செய்தி... அதாவது அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பிகினிக்குப் பதில் முழு நீள டிரஸ் போட்டு ஆடுமாறு வீராங்கனைகள் கேட்டுக் கொள்ளப்படவுள்ளனராம்.

பீச் வாலிபால் என்றால், அதிலும் மகளிர் பீச் வாலிபால் என்றால் ஆண் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். வீராங்கனைகளின் ஆட்டத்தை விட அவர்களின் உடல் அழகை ரசிக்கத்தான் கேமாவென்று கூட்டம் கூடும். வாலிபால் பார்க்க வருகிறார்களோ இல்லையோ, வீராங்கனைகளை ரசிக்கத்தான் கட்டி ஏறும் கூட்டம்.

பிகினி உடையில்தான் இதில் வீராங்கனைகள் பங்கேற்பார்கள். இதனால் அவர்களின் உடல் பாகங்கள் முக்கால்வாசி வெளியே தெரிவதைத் தவிர்க்க முடியாது. இதுதான் ஆண்களை பீச் வாலிபால் பக்கம் ஈர்க்க முக்கியக் காரணம்.

ஒலிம்பிக் போட்டிகளில் பிற விளையாட்டுக்களை விட பீச் வாலிபால் போட்டியைப் பார்க்கத்தான் நிறைய டிக்கெட் விற்பனையாகி வருகிறதாம். சமீபத்தில் நாடாளுமன்ற சதுக்கப் பகுதியில் இங்கிலாந்து பீச் வாலிபால் வீராங்கனைகள் சாரா டேம்னியும், ஷானா முலினும் பயிற்சி எடுக்க வந்தபோது அங்கு டிராபிக் ஜாம் ஆகிப் போகும் அளவுக்கு கூட்டம் கூடி விட்டது இருவரையும் வேடிக்கை பார்க்க.

ஆனால் தற்போது ஆண் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது. அதாவது லண்டனில் குளிர் கடுமையாகி வருகிறதாம். தற்போது அங்கு 16 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இன்னும் குளிர் கூடுமானால், பிகினி உடை அணிய வீராங்கனைகளுக்குத் தடை விதிக்கப்படும். மாறாக நீண்ட லெங்கிங்ஸ் மற்றும் கையை மூடும் ஸ்லீவ் டாப்ஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டுதான் ஆட முடியும்.

இதுதான் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இதற்குத்தானா ஆசைப்பட்டோம் பாலகுமாரா ரேஞ்சுக்கு ரசிகர்கள் மகா கவலையில் உள்ளனராம்.

இப்படிக் கவலையில் உள்ளவர்களில் சாமானியர்கள் மட்டுமல்ல இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களும் கூட பலர் இடம் பெற்றுள்ளனர். அரசு அதிகாரிகள், ஏன், இளவரசர் ஹாரியே கூட ஏமாற்றத்தில் உள்ளாராம். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கூட பீச் வாலிபால் போட்டிகளைப் பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக கூறுகிறார்கள்.

அவரும் போட்டியைக் காண பெருத்த ஆர்வத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கடும் குளிர் காரணமாக இவர்கள் கண்களில் 'டிரஸ்ஸை அள்ளிப் போடப் போகிறார்கள்' வீராங்கனைகள்...!
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.