Ad

Photobucket
 
திங்கள், 30 ஜூலை, 2012

பொறுப்பு! – ஒரு பக்க சிறுகதை!

திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.

“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.

“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான், இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம், ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.

நன்றி: குமுதம்

 இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.