ஒலிம்பிக் நெருங்கிவருகையில் உலகெங்கிலும் விளையாட்டுக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதிலும் அதிசயமில்லை.
புதிய ஈ-புத்தகத்தில் பதியப்பட்ட கின்னஸ் உலகச் சாதனைகளை கின்னஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
சிலவற்றைப் பார்க்கையில் அதிசயமாகவும் சிலவற்றைப் பார்க்கையில் அதிர்ச்சியாகவும் இருக்கும்.
இவற்றில் அதிவேகமான 100மீ. தடைதாண்டலை நீச்சலிற்கான செட்டைக் காலணிகளுடன் 18.52 விநாடிகளில் தாண்டிய நியூசிலாந்தின் வெரோனிக்கா ரோர், 18.58 விநாடிகளில் வேகமான நாலுகால் பாய்ச்சலில் 100மீ. ஓட்டத்தினை முடித்த யப்பானின் கெனிச்சி இற்றோ ஆகியோரின் பதிவுகளும் பதியப்பட்டன.
அத்துடன் ஆழமற்ற பகுதியில் 2011 நவம்பரில் குதித்துத் தனது பதிவையே முறியடித்தார் அமெரிக்கா, கொலராடோவின் டறன் ரெய்லர் (50). இவர் 36 அடி 8.94 அங்குல உயரத்திலிருந்து 30 செ.மீற்றரே உயரமான நீரிற்குள் பாய்ந்திருந்தார். இதன்போது வலித்தாலும் அதனால் கிடைத்த பதிவு வாழ்நாள் முழுவதும் இருக்குமென்பது மகிழ்ச்சியைத் தந்ததென்றார் அவர்.
64 வயதான ஜோன் இவான்ஸ் மிகப் பாரமா னகாரைத் தனது தலையில் வைத்துச் சாதனை செய்திருந்தார். இவரது பதிவு 14 வருடம் முறியடிக்கப்படாத நிலையிலுள்ளது.
இதுபோன்றே வாளை விழுங்கிய பெண், காலால் அம்பினை அதிக தூரத்திற்கு எய்த பெண், மிக ஆழமான நீரடியில் சைக்கிளோட்டியவர், கண்களிலிருந்து பாலைப் பீய்ச்சியடித்தவர் என மனிதர்களின் கின்னஸ் வரிசையாக வந்தபோதிலும் மிருகங்களும் தமது பதிவுகளைச் செய்திருந்தமை இன்னும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஒரு மீன் சிறியதொரு வளையத்தினூடாக சென்றமை மற்றும் மிக உயரத்தினைக் கடந்த நாய் என மிருகங்களும் தமது சாதனையைச் செய்துள்ளன.



















கருத்துரையிடுக