Ad

Photobucket
 
திங்கள், 23 ஜூலை, 2012

பினாயிலை குடித்து, கம்மலை விழுங்கி... கள்ளக்காதல் ஜோடியின் தற்கொலை முயற்சி!

கள்ளக்காதல் ஜோடி ஒன்றை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து நிறுத்தினர். ஆனால் எங்கே தங்களைப் பிரித்து விடுவார்களோ என்று பயந்து போன அவர்கள் காவல் நிலைய டாய்லெட்டில் வைத்திருந்த பினாயிலை குடித்தும், காதில் கிடந்த கம்மலை வாயில் போட்டும், தூக்க மாத்திரையை சாப்பிட்டும் தற்கொலைக்கு முயன்று போலீஸ் ஸ்டேஷனையே களேபரப்படுத்தி விட்டனர்.

சென்னையை அடுத்துள்ள செம்மஞ்சேரியில்தான் இந்தக் கூத்து நடந்தது.
கோவளம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான குமாரசாமி. இவருக்கு ராஜலட்சுமி என்ற லட்சணமான மனைவியும், 2 அழகான குழந்தைகளும் உள்ளனர். இவர் சிறுசேரி ஐடி பார்க்கில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இதே நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளியாக இருப்பவர் 26 வயதான ஜெயலட்சுமி. இவருக்கும் கல்யாணமாகி ஆறுமுகம் என்ற கண் நிறைந்த கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இப்படி அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இந்த துப்புறவுத் தொழிலாளிகளின் வாழ்க்கையில் கள்ளக்காதல் என்ற குப்பை விழுந்து விட்டது. இருவரும் கள்ளக்காதலில் மூழ்கித் திளைத்தினர். அடிக்கடி லீவு போடுவது, எங்காவது போவது, ஜாலியாக இருப்பது என்று ஊர் சுற்ற ஆரம்பித்தனர்.

இவர்களின் உல்லாச சவாரி, இரு வீட்டாருக்கும் தெரிய வந்து அதிர்ந்தனர். இருவரையும் அவரவர் கணவரும், மனைவியும் கண்டித்தனர். ஆனாலும் இருவரும் திருந்தியபாடில்லை. இந்த நிலையில் திடீரென கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி விட்டது.

இதையடுத்து ராஜலட்சுமியும், ஆறுமுகமும் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் கள்ளக்காதல் ஜோடியைத் தேடி வந்தனர். அப்போது இருவரும் செம்மஞ்சேரியிலேயே ஒரு வீட்டில் ஒளிந்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து போலீஸார் பஞ்சாயத்து நடத்தினர். அப்போது குமாரசாமி தனது மனைவியுடன் சேர விரும்பவில்லை என்று கூறினார். அதேபோல ஜெயலட்சுமியும், எனக்கு குமாரசாமிதான் வேண்டும், என் புருஷனும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டாம் என்று அடித்துக் கூறினார். இதைக் கேட்ட இரு குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸாருக்கு தலை சுற்றியது.

இந்த நிலையில் திடீரென காவல் நிலைய டாய்லெட்டுக்குள் ஓடிய குமாரசாமி அங்கிருந்த பினாயிலை எடுத்து மடக்கு மடக்கென்று குடித்தார். அதைப் பார்த்து பதறிப் போன ஜெயலட்சுமி, தான் மறைத்து வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டு விழுங்கினார். அத்தோடு நில்லாமல் காதில் கிடந்த கம்மல்களையும் கழற்றி வாயில் போட்டு டபக்கென விழுங்கி விட்டார்.

இந்த கிளைமேக்ஸை சற்றும் எதிர்பாராத போலீஸார் முதல்ல இவங்களை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டுப் போங்கப்பா என்று உத்தரவிட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் உயிர் பிழைத்தனர்.

பின்னர் இருவரையும் தனித்தனியே அழைத்துப் பேசிய போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மறுபடியும் எப்போது பஞ்சாயத்து வரும் என்பது தெரியவில்லை.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.