Ad

Photobucket
 
புதன், 1 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக் பார்க்க வந்த வேற்றுகிரகவாசிகள்! (திடுக்கிடும் பட இணைப்பு)

ஒலிம்பிக்கின் தொடக்கவிழாவில் வானத்தை வாணவேடிக்கைகள் அலங்கரித்தபோது அந்த இரவு வானில் இன்னுமொரு தோற்றம் தெரிந்தது… அது வேறெதுவுமல்ல. பறக்கும் தட்டு ஒன்றுதான்.

பறக்கும் தட்டினைப் போன்ற உருவத்தில நடுவில் சற்று வீங்கியும் காணப்பட்டது. ஆனால் எவருமே இந்த மெதுவாக நகர்ந்த பொருளை விளக்க முன்வரவில்லை.

கிழக்கு லண்டனில் 12.30 மணியளவில் ஸ்ரட்போட்டிலமைந்துள்ள ஒலிம்பிக் பூங்காவிற்கு அண்மையில் இது காணப்பட்டது.

சில வாரங்களிற்கு முன்னர்தான் பிரித்தானிய நிபுணர் ஒருவர் இதுபற்றித் தெரிவித்திருந்தார்.

Examiner.com என்ற இணையத்தினால் மட்டுமே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒலிம்பிக்கின் நேரடி ஒளிபரப்பு செய்திநிறுவனத்தின் பதிவுகளில் இந்தப் பொருள் ஒரு மிதக்கும் விமானம் போலக் காணப்படவேயில்லை.

இது உண்மையில் ஓர் உலங்குவானூர்தியாகவோ அல்லது போலியான வடிவமைக்கப்பட்டதொரு விம்பமென்றோதான் சிலர் குறிப்பிட்டனர்.

வேற்றுக்கிரகவாசிகள் எமது மனோதத்துவதத்தினைப் புரிந்துகொண்டிருந்தால் அவர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கியமான நாளில் தோன்றலாமென இம்மாத முற்பகுதியில் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி ஆராயும் திரு.போப் தெரிவித்தார்.

இந்த ஒளிப்பதிவு 'MrScipher' என்ற இணையப் பயனாளரிடமிருந்தே வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

1998இல் ரொனி பிளேயர் பிரதமராக இருந்தபோது வேற்றுக்கிரகவாசிகளின் தகவல்களை வெளிப்படுத்தும்படி அவர் பாதுகாப்பமைச்சிற்குத் தெரிவித்திருந்தார். இதனால் பறக்கும் தட்டு தொடர்பான பாதுகாப்பமைச்சிலிருந்து திரு.பிளேயர் அறிவுரைகள் கேட்டதாகவும் அவற்றைப் பாதுகாப்பமைச்சு அவருக்கு அனுப்பியிருந்ததென்றும் கூறப்படுகின்றது.

இதில் தமக்குப் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாகக் குறிப்பிட்டளவு ஈடுபாடே காணப்படுகின்றதாகவும் பாதுகாப்பமைச்சு தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.








 இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.