Ad

Photobucket
 
வெள்ளி, 7 செப்டம்பர், 2012

காதலனை சந்தோஷமாக வைக்க 5 டிப்ஸ்!

வாழ்க்கைத்துணையை சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. காதல் செய்யும் போது ஆரம்ப காலத்தில், அந்த காதல் நன்கு சுவாரஸ்யமாக நன்றாக போகும்.

அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து, அளவுக்கு அதிகமான பாசத்தால் ஒரு சிலவற்றை கேட்க, அதனால் டென்சன் மற்றும் போர் அடித்துவிடும். இவ்வாறு ஏற்படுமாறு தெரிந்துவிட்டால், அந்த காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்காது. ஆகவே காதல் நன்கு நீண்ட நாட்கள் நீடிக்க, நம் வாழ்க்கைத்துணையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது கடினம் இல்லை. அவளுக்கு ஏதேனும் ஒரு கிப்ட் கொடுத்துவிட்டால், அவள் உருகி, உங்கள் அன்பில் விழுந்துகிடப்பாள்.

ஆனால் அதுவே ஆண்கள் என்று வரும் போது, ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து, அவர்களிடம் நடக்க வேண்டும். பெரும்பாலான ஆண்கள் சற்று கோபக்காரர்களாகவே இருப்பார்கள். அத்தகையவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பவர்கள், கண்டிப்பாக இதை படிக்க வேண்டும். ஏனெனில் இதில் அந்த ஆண்களை எவ்வாறு நடக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.

1* காதலனிடம் ஒவ்வொரு முறை பேசும் போதும், அவன் மீது முழு நம்பிக்கை இருக்குமாறு பேச வேண்டும். இவ்வாறு பேசினால், காதலனுக்கு உங்கள் மீது முழு நம்பிக்கையும் வருவதோடு, உங்கள் அருகில் அன்போடு வந்து, எப்போதும் உங்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டு, அவனும் சந்தோஷமாக இருப்பான். இது இருவருக்கும் இடையில் ஒரு பெரும் இணைப்பான ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் முழு நம்பிக்கையுடன் காதலனிடம் பேசினால், அவனும் எப்போதும், மகிழ்ச்சியாக நடந்து கொள்வான்.

2* எப்போதும் சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை போட வேண்டாம். அதுவும் “ஏன் அங்கு போவதை சொல்லவில்லை?, “ஏன் போன் செய்யவில்லை?” என்று கோபம் கொண்டு, அவனிடம் சண்டை போட வேண்டாம். ஏனெனில் எந்த ஆண்களுக்கும் அடிக்கடி சண்டை போட்டால், அவர்கள் காதல் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, பிரியக் கூட நேரும். ஆகவே அவர்களுக்கு எந்த ஒரு கட்டளையும் இடாமல் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக போகும். அதுவே அவர்களுக்கும் பிடிக்கும். மேலம் ஏதேனும் கோபம் என்றால் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். இல்லையென்றால் அவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் விருப்பம் போய்விடும்.

3* ஆண்களின் மனதில் நல்ல பெயரை, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, சமையல் தான். ஆண்கள் எப்போதும் ஹோட்டல்களிலேயே பெரும்பாலும் சாப்பிடுவர். ஆனால் அவர்களுக்கு வீட்டு சமையல் என்பது மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்களுக்கு சந்தோஷத்தை தர, எதிர்பாராத வகையில், அவர்களுக்கு மிகவும் பிடித்ததை வீட்லேயே சமைத்துக் கொடுத்து அசத்தினால், அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவதுடன், அவர்களுக்கு உங்கள் மீது அன்பும் கூடும்.

4* ஆண்களின் சந்தோஷத்திற்கு இடையூறாக யார் இருந்தாலும் அவர்களை ஆண்கள் விரைவில் வெறுத்துவிடுவர். உதாரணமாக, அவர்கள் தன் நண்பர்களுடன் எங்கேனும் வெளியே செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, போகும் போது பேசாமல் விட வேண்டும். அந்த நேரத்தில், அவர்களிடம் இத்தனை மணிக்கு என்னை வந்து பார்க்க வேண்டும் என்று அவர்களது சுதந்திரத்திற்கு எப்போதும் தடையாக இருக்கக் கூடாது. அப்போது அவர்களிடம் நீங்கள் சென்று வாருங்கள், நாம் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்று சற்று விட்டுக் கொடுத்து பேசினால், அவர்கள் சந்தோஷப்படுவதோடு, அந்த நேரத்தில் அவர்கள் மனதில் நீங்கள் மிகவும் பிரியமுள்ளவர்களாக இருப்பீர்கள்.

5* சிலசமயங்களில் அவர்கள் சற்று கவலையோடு இருப்பதோடு, அவர்களை சற்று அணைத்து, எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று சற்று ஆறுதலாக பேசி முத்தம் கொடுத்தால், அவர்கள் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, அவர்கள் உள்ளமும் மகிழ்ச்சியடையும்.

ஆகவே மேற்கூறியவாறு நடந்து கொண்டால், ஆண்கள் மகிழ்ச்சியடைவதோடு, தன் காதலி மீது அன்பு அதிகரிக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் காதல் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.