கடந்த மாதம் கலைஞர் அவர்கள் பேஸ்புக்கில் தனது கணக்கைத் துவக்கினார்.
அதனைத் தொடர்ந்த தற்போதைய முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவும் வெகு விரைவில்
பேஸ்புக்கில் இணையவிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினும் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார். அவருடைய பேஸ்புக் முகவரி https://www.facebook.com/SachinTendulkar நேற்று காலை 9 மணி முதல் செயல்படத் தொடங்கியது. அதற்குள் 4 லட்சம் பேர் தங்களை அவருடைய பேஸ்புக் நண்பர்கள் வட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
கடந்த 2010ல் சச்சின் டுவிட்டரில் இணைந்தார். அவருடைய டுவிட்டரை 26,80,791 போர் பின்பற்றி வருகின்றனர்.
தனது பேஸ்புக் வீடியோவில் தனது ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் அவர்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும், பாராட்டுகளுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் நட்சத்திரமான அமிதாபச்சன் அவர்களும் கடந்த ஆகஸ்ட் அன்று பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள். இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் அவருடைய பேஸ்புக் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்திருக்கின்றனர்.
அதுபோல் அமீர்கானும் 5 லட்சத்திற்கும் அதிகமான பேஸ்புக் நண்பர்களை வைத்திருக்கிறார்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக