யேசுநாதரை சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளில் இரண்டை எருசலேமில்
உள்ள 2000 ஆண்டுகள் பழைமையான மயானம் ஒன்றில் இருந்து மீட்டு எடுத்து
உள்ளார் என்று அறிவித்து உள்ளார் உலகப் பிரசித்தி வாய்ந்த ஆய்வாளர்களில்
ஒருவரான Simcha Jacobovici..
இந்த அறிவிப்பு வரலாற்று அறிஞர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இவர் இம்மயானத்தில் இருந்து பிரேதப் பெட்டிகள் போன்ற பெட்டிகளை 20 வருடங்களுக்கு முன்னர் மீட்டு இருந்தார். இவற்றுக்குள் மனித எலும்புக் கூடுகள் இருந்தன.இரு பெட்டிகளில் காய்பா என்கிற பெயர் எழுதப்பட்டு இருந்தது.கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாட்டு.
புதிய ஏற்பாட்டின்படி யேசுநாதரை படுகொலை செய்கின்றமைக்கு முன் நின்று செயல்பட்ட தலைமை யூத குருவின் பெயர் காய்பா. யேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தி இருந்த ஆணிகளை யூதர்களின் தலைமை மத குருவான காய்பாவின் உடலை அடக்கம் செய்த இப்பெட்டிகளுக்குள் வைத்து இருக்கின்றனர் என்று அடித்துக் கூறுகின்றார் ஆய்வாளர்.
யேசுநாதர் உயிருடன் இருந்தபோது ஏராளமான அற்புதங்களை செய்து இருந்தார். யேசுவின் அற்புத சித்திகளை மரணத்தின் பின்னரான வாழ்வில் அடைகின்றமைக்காக காய்பா திட்டமிட்டு இருந்தான் என்றும் இத்திட்டத்துக்கு அமையவே யேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்பட்ட ஆணிகள் காய்பாவின் உடலத்துடன் புதைக்கப்பட்டன என்றும் விளக்கம் கொடுக்கின்றார்.
இந்த ஆய்வாளர் விவரண திரைப்படங்களை இயக்குபவர். இரு ஆணிகளையும் கண்டுபிடித்தமையை மையப்படுத்தி “The Nails of the Cross” என்கிற பெயரில் தற்போது விவரண திரைப்படம் ஒன்றை எடுத்துக் இயக்குகின்றார்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக