Ad

Photobucket
 
வியாழன், 1 நவம்பர், 2012

(01.11.2012) இன்றைய நாள் எப்படி..! வாருங்கள் உங்கள் இராசிக்கான பலன்களை பார்க்கலாம்!

மேஷம்:
இன்று, உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். எந்த செயலையும் பரிசீலித்து செய்வதால் அதிக அளவில் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிப் பெற நண்பரின் உதவி உண்டு. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணவரவு இருக்கும். தவிர்க்க இயலாதபடி புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.

ரிஷபம்:
இன்று, உங்கள் மனதில் புத்துணர்வு ஏற்படும். பணிகளை திறம்பட நிறைவேற்றி நண்பர், உறவினரிடம் பாராட்டு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியப்பூட்டும் வகையிலான வளர்ச்சி உருவாகும். சராசரி பணவரவுடன் உபரி பணவருமானமும் கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்த மன மகிழ்ச்சி பெறுவீர்கள்.

மிதுனம்:
இன்று, உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், அதிக அக்கறை கொள்வீர்கள். நண்பரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப் போகலாம். தொழில், வியாபாரம் செழிக்க சில மாற்றங்களை உருவாக்குவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சால் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். தாயின் அன்பு, ஆசி மனதிற்கு ஊக்கம் தரும்.

கடகம்:
இன்று, உங்கள் எண்ணமும், செயலும் சிறந்து, எதிர்ப்பார்த்த வெற்றியைத் தரும். உங்களை முன்னர் விமர்சித்தவர் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். எதிர்கால தேவைக்கு இயன்ற அளவில் பணம் சேமிப்பீர்கள். அதிகாரிகள், திட்ட இலக்கை நிறைவேற்றி நிர்வாகத்திடம் பாராட்டு பெறுவர்.

சிம்மம்:
இன்று, நீங்கள் தவமாக கருதி செய்த செயல்களில், நல்ல பலன்களை பெறுவீர்கள். உறவினர், நண்பர் பாராட்டி வாழ்த்துவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரித்து, குடும்ப செலவுகளை தாராள மனப்பாங்குடன் நிறைவேற்றுவீர்கள். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வெகுமதி கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

கன்னி:
இன்று, அடுத்தவர் நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். நண்பரின் செயலில் வரும் குளறுபடியை, கண்டிப்பு மனப்பாங்குடன் சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம். இதனால் மன வருத்தம் தான் மிஞ்சும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனத்தில் கூடுதல் உழைப்பு நற்பலன் பெற உதவும். போக்குவரத்தில் கவன நடை நல்லது. மனைவியின் சேமிப்பு பணம் சிறு அளவிலான செலவுகளுக்கு பயன்படும்.

துலாம்:
இன்று, உங்களிடம் சிலர் அதிருப்தி மனப்பாங்குடன் பேசுவர். பொது இடங்களில் சிலர் அதிருப்தி மனப்பாங்குடன் பேசுவர். பொது இடங்களில் தேவையற்ற வாக்குவாதம் தவிர்ப்பதால் நற்பெயரை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால் வளர்ச்சி நிலை சீராகும். சராசரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதாமாகும். சத்தான உணவு உண்பதால் உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம்:

இன்று, எந்த செயலையும் புதிய கோணத்தில் நிறைவேற்றுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு பெருமளவில் குறையும். தொழில், வியாபாரத்தில் தாராள உற்பத்தி, விற்பனை உண்டாகும். நிலுவைப் பணம் வசூலிக்க இதமான அணுகுமுறை பின்பற்றுவீர்கள். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

தனுசு:
இன்று, உங்களின் சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். முக்கியஸ்தரின் உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான போட்டி குறையும். புதிய யுக்தியால் தொழில் சார்ந்த நன்மைகளை பெறுவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை தாராள மனதுடன் பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்:
இன்று, ஞாபக மறதிக்கு உள்ளாவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நினைவூட்டுதல் பணிகளை நிறைவேற்ற உதவும். தொழில் வியாபாரம் சீராக தகுந்த பணிபுரிவீர்கள். பணவரவு சிறு அளவிலான செலவுகளுக்கு மட்டுமே பயன் படுவதாக இருக்கும் முக்கிய செலவுக்கு பணக்கடன் பெறுவீர்கள். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.

கும்பம்:
இன்று, சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொள்வர். திறம்பட செயல்படுவதால் உங்கள் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழில், வியாபாரம் செழிக்க வருகிற வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்துவதால், நன்மை கூடும். பணவரவுக்கேற்ப செலவுகளை அமைத்தக் கொள்வீர்கள். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். இயந்திர தெழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை கூடுதல் கவனத்துடன் பின் பற்ற வேண்டும்.

மீனம்:
இன்று, அலட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். துவங்கிய பணிகள் இனிதே நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பணவசதிக் கேற்ப வீட்டு சாதனப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அனுகூலம் எளிதில் கிடைக்கும்.

இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்  
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.