Ad

Photobucket
 
திங்கள், 5 நவம்பர், 2012

(05.11.2012) இன்றைய நாள் எப்படி..! வாருங்கள் உங்கள் இராசிக்கான பலன்களை பார்க்கலாம்!

மேஷம் :
மேஷம்இன்று, முக்கியமான விஷயத்தில் சுமுக தீர்வு ஏற்படும். மனதில் அளவற்ற உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு நிறைவேற கூடுதல் பணி புரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். நண்பருக்க இயன்ற அளவில் உதவுவீர்கள்.

ரிஷபம்:

இன்று, உங்கள் நண்பரின் எதார்த்த பேச்சு சங்கடம் ஏற்படுத்தும். பெருந்தன்மையுடன் நடந்து நட்பின் புனிதம் பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவுக்கேற்ப, செலவுகளை திட்டமிடுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் சீர்பெற தகுந்த மருத்துவ சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் உண்டு.

மிதுனம்:
இன்று, எதிர்பார்த்த வகையில் சில நன்மை பெறுவீர்கள். இதனால், மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் பிறக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன் உபரி பண வருமானமும் உண்டு. முக்கிய வீட்டு சாதனப்பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

கடகம்:
இன்று, சிலர் சுயலாபத்திற்காக பணம் கடனாக கொடுக்க முன்வருவர். தேவையற்ற பணக்கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் உழை ப்பு தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். நிலுவைப் பணம் வசூலிக்க இதமான அணுகுமுறை பின்பற்றுவதால், நற்பலன் கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற துணை நிற்கும்.

சிம்மம்:

இன்று, உங்களின் செயல்கள் அனுகூல பலன்களை எளிதாக பெற்றுத்தரும். நண்பர், உறவினருக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு வகை உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான உதவி கிடைக்கும்.

கன்னி:
இன்று, உங்கள் செயலில் லட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த உதவி எளிதாக வந்து சேரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாய பணவரவைத் தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு கிடைக்கும்.

துலாம்:
இன்று, உங்கள் நண்பர், உறவினரின் கருத்தை மதித்து செயல்படுவது அவசியமாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவ மனதில் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய தேவைக்கு பணக்கடன் பெறுவீர்கள். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

விருச்சிகம்:
இன்று, உருவாகிற கூடுதல் பணிகளால் சிரமம் ஏற்படலாம். பிறரது விமர்சனத்திற்கு உள்ளாகாமல் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். விலை மதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.

தனுசு:
இன்று, உங்கள் குடும்ப பெரியவர்களின் சொல்லை கூடுதல் அன்புடன் மதித்து நடப்பீர்கள். வாழ்வில் புதிய வெற்றி கிடைத்திடும். தொழில், வியாபாரம் நல்லவிதமாக முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு வரும்.

மகரம்:
இன்று, உங்களின் சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். பகைவராலும் மறைமுக அனுகூலம் கிடைக்கு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான பணிபுரிவீர்கள். இடையூறு விலகி உற்பத்தி, விற்பனை சிறக்கும். ஆதாயம் பணவரவு கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்

கும்பம்:
இன்று, உங்களின் சிரமங்களை பிறரிடம் சொல்வதால் மதிப்பு குறைவு ஏற்படலாம். தெய்வத்திடம் கஷ்டம் நிவர்த்தியாக பிரார்த்தனை செய்வது நலம் பெற உதவும். தொழில், வியாபாரத்தில் நன்மை பெற கூடுதல் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். கவுரவம் கருதி செய்கிற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வாகன பராமரிப்பு செய்வதால் பயணமுறை எளிதாகும்.

மீனம்:
இன்று, உங்களை சார்ந்தவர்களின் சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நற்பெயரை பாதுகாக்க உதவும். எதிர்வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது நல்லது. தொழில், வியாபார நிலை சுமுகமாக இருக்கும். அளவான பணவரவு உண்டு. சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவு வகை உண்ணக்கூடாது.


இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்    
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.