இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் வளம்பெற, அனுகூல சூழ்நிலை உருவாகும். பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி, தகுந்த நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். இல்லறத் துணையின் அன்பில் மனம் மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
இன்று, சிறுபணியையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பாராட்டு மனதிற்கு ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திட்டமிட்டபடி நிறைவேறும். உற்பத்தி, விற்பனை செழித்து, தாராள பணவரவு கிடைக்கும். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். உத்தியோகஸ்தர் இலக்கு நிறைவேற்றி நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர்.
மிதுனம்:
இன்று, உங்களின் வெளிவட்டார தொடர்பு தொந்தரவு தருவதாக இருக்கும். சொந்தப்பணி நிறைவேற்ற கூடுதல் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். உடல்நலம் ஆரோக்கிய பலம்பெற, மருத்துவ சிகிச்சை உதவும். நிர்பந்தத்தின் பேரில் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.
கடகம்:
இன்று, உங்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற, புதிய திட்டம் செயல்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் தரும். பழைய விவகாரம் ஒன்றில் அனுகூலத்தீர்வு கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:
இன்று, புதிதாக கிடைக்கிற நல்லவர்களின் நட்பு மனநிறைவைத் தரும். செயல்களில், புதிய உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வாழ்க்கைத் தரம் உயரும். உபரி பணவருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் இருந்த தொந்தரவு விலகும்.
கன்னி:
இன்று, சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். மனதில் இருந்த செயல்திட்டம் முழுவடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். எதிரி இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து, கூடுதல் சம்பளம் பெறுவீர்கள்.
துலாம்:
இன்று, அவசரப்பணி ஒன்று உருவாகி அல்லல் தரலாம். கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.
விருச்சிகம்:
இன்று, நீங்கள் நல்லதை செய்தும் மனவருத்தம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் கொஞ்சம் விலகி செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். உணவுப் பண்டங்கள் தரம் அறிந்து வாங்குவது நல்லது. இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை கவனமாக பின்பற்ற வேண்டும்.
தனுசு:
இன்று, நீங்கள் வெகுநாள் எதிர்பார்த்த செயல் ஒன்றில் அனுகூலம் ஏற்படும். உங்களின் திறமையை பலரும் அறிந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வியத்தகு அளவில் லாப விகிதம் உயரும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றம் செய்வீர்கள். சுற்றுலா பயணத்திட்டம் உருவாகும்.
மகரம்:
இன்று, கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவதில், தாமதம் ஏற்படலாம். அவப்பெயர் வராத அளவில் செயல்பட வேண்டும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல நிலையை பாதுகாக்கலாம். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. நண்பருடன் வாகன பயணத்தில் தகுந்த கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் விவகார பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
இன்று, கடந்த நாட்களில் நடந்த உண்மை சம்பவத்தை, நண்பர்களிடம் பேசுவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை செழிக்கும். உபரி பண வருமானம் பெறுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மீனம்:
இன்று, உங்கள் செயல்களை, தகுந்த பரிசீலனை செய்து நிறைவேற்றுவது நல்லது. எவரிடமும் பொதுவிவகாரம் குறித்த பேச்சு கூடாது. தொழிலில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை தகுந்த உழைப்பினால் சரிசெய்வது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக