Ad

Photobucket
 
வியாழன், 14 ஜூன், 2012

நித்தி ஆசிரமத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 சிறுவர்கள்: யாரென்று தெரியாமல் போலிசார் குழப்பம்!


பெங்களூரில் நித்தி நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்திய காவல்துறையினரும், அதிகாரிகளும் ஓர் அறையைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காரண்ம் அந்த அறையில் 50 சிறுவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் யார் ஏன் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற விபரம் எதுவும் இன்னமும் தெரியவில்லை. அதைப்பற்றிய விசாரணைகள் நடைபெர்று வருகின்றன.

நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் பல அறைகளைப் பூட்டி சீல் வைத்து விட்டனர்.

அங்கு நடந்த சோதனையின்போது கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள், மது பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிப்பது போல கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.

சில அறையில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமிசிலைகள், பஞ்சலோக பொருட்கள் இருந்தது. ஆசிரமத்தில் 3 கார்கள் நின்றது. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் போலீசாரால் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

போலீசார் ஆசிரமத்தில் நுழைந்தபோது 200 பக்தர்கள் உள்ளே இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சில சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு ரகசிய அறையில் 50 சிறுவர்- சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அனைவருக்கும் 8 முதல் 15 வயதே இருக்கும். அவர்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களிடம் செக்ஸ் சில்மிஷ வேலைகளில் நித்தியானந்தாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் இதுகுறித்து தனியாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரமத்தில் இருந்த அத்தனை பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். வெளிநாட்டுக்கார ஆதரவாளர்களைத்தான் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் விழிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கேயேதான் டேரா போட்டுள்ளனர்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.