Ad

Photobucket
 
புதன், 13 ஜூன், 2012

எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது !


எந்தப்பெண்ணிலும் இல்லா ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது !' மனதைக் கவர்ந்த பெண்ணைப் பார்த்து ஆண்கள் பாடும் பாடல் இது. பெண்ணின் உருவம் மட்டுமே ஆணை கவர்வதில்லை அதையும் தாண்டி சில விசயங்கள் இருந்தால்தான் ஆணை கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்ணிடம் உள்ள எந்தமாதிரியான குணாதிசயங்கள் பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.


தனித்துவமான பெண்
எதற்கெடுத்தாலும் கணவனை மட்டுமே சார்ந்திருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லையாம். அதேசமயம் தனியாக எதையும் தைரியமாக சந்திக்கும் மனப்பான்மை கொண்ட தைரியலட்சுமிகளைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். அச்சமில்லாத பெண்கள்தான் இன்றைய உலகிற்கு தேவை என்கின்றனர் நிபுணர்கள்.

உண்மையும், நேர்மையும்
நேர்மையாகவும் அதேசமயம் உண்மையாகவும் நடந்து கொள்ளும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்கிறதாம். எந்த ஒரு செயலையும் நேர்மையோடு செய்து முடிக்க வேண்டும். தனக்கும் தன்குடும்பத்திற்கு உண்மையானவளாக இருக்கவேண்டும் என்பது ஆண்களின் எதிர்பார்ப்பு. அதேபோல் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை வீணாக்கிவிடும் பெண்களைக் கண்டாலே ஓடி விடுகின்றனராம் ஆண்கள். எனவே பெண்களே எப்பவுமே நிகழ்காலத்தில் சந்தோசமாக வாழுங்கள்.

அழகில் கொஞ்சம் கவனம்
என்னதான் சுதந்திர உணர்வோடு இருந்தாலும், தனித்துவமாக இருந்தாலும் அழகிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டுமாம். சினிமா நடிகை போலவோ, மாடல் போலவே இருக்க வேண்டும் என்றில்லை. திருத்தமான அழகு, ஆர்பாட்டமில்லாத உடை அலங்காரம் போன்றவைதான் ஆண்களை மிகவும் கவர்கிறதாம். உங்கள் முகத்திற்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், சின்னதாய் சில மேக்அப்களை செய்து கொள்ளுங்கள் அப்புறம் பாருங்கள் அழகு ராணி நீங்கள்தான்.

தன்னம்பிக்கை பெண்கள்
எதற்கும் கவலைப்படாமல் எந்த பிரச்சினை வந்தாலும் தைரியமாக சந்திக்கும் மனப்பான்மை கொண்ட தன்னம்பிக்கை பெண்களை ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதாம். பொய்யாக நடிக்கும் பெண்களை ஆண்கள் எளிதில் கண்டறிந்து விடுகின்றனராம். எனவே உங்கள் புன்னகை, உங்கள் கண்கள், உங்கள் பேச்சு அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.

தெளிவான பேச்சு
பிற ஆண்களை நேருக்கு நேராக பார்த்து பேசாமல் கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு பேசியதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு யாராக இருந்தாலும் தைரியமாக கண்களை நேராக பார்த்தும் பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். அதுபோன்ற பெண்கள்தான் குடும்பத்திற்கு ஏற்றவர்கள் என்பது ஆண்களின் நம்பிக்கை. என்ன பெண்களே இந்த தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கா செக் பண்ணிக்கங்க.
2 comments

2 Responses so far.

  1. Divya says:

    woww superb friend... very nice...
    ungalaala innum saathikka mudiyum.. congratulations ...

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.