Ad

Photobucket
 
வெள்ளி, 15 ஜூன், 2012

பெண்கள் சொல்வதை கேளுங்க! ஈஸியா அட்ராக்ட் செய்யலாம்!!


பொண்ணுங்களுக்கு என்ன புடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காக சில ஆலோசனைகள் வழங்குகின்றேன். புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்.

பெண்களைக் கவர முதலில் டேக் இட் ஈசி பாலிசியை வளர்த்துக்கொள்ளுங்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள். அதுதான் பெண்ணைக் கவர்வதற்கான முதற்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்ய ஆரம்பித்து கடைசியில் உள்ளதும் போய்விடும்.
தன்னம்பிக்கை கொண்ட ஆண்களால்தான் பெண்களை எளிதில் கவரமுடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் தலைகவிழ்ந்து பேசாதீர்கள். கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுங்கள். உங்கள் உடல்மொழி, பேசும் திறன் போன்ற அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.

சிடுமூஞ்சித்தனமாவோ, ரிசர்வ் டைப் ஆகவோ இருப்பதை விட புன்னகையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் கவர்கின்றனராம் எனவே உங்கள் உதடுகளில் புன்னகை தவழட்டும். சந்தோசமான புன்னகையை தினசரி கண்ணாடியைப் பார்த்தாவது பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

பேசும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். அதேபோல் உங்களுக்கு தெரிந்தவைகளை எல்லாம் பேசி பெண்களை மிரட்சியடையச் செய்யவேண்டாம். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அது தொடர்பானவைகளை முதலில் பேசி அசத்துங்கள். பின்னர் உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.

பெண்கள் கூறுவதை காதுகொடுத்து கவனியுங்கள். நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே அவர்களின் மனதில் உயர்ந்து விடுவீர்கள். பெண்களின் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அப்புறம் நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

காதலிக்காகவோ, மனைவிக்காகவோ பொது இடங்களில் சென்று காத்திருப்பதில் தவறில்லை. அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும். காத்திருக்கும் சமயங்களில் என்ன பேசலாம் என்பதை ஒத்திகை பார்க்க இயலும்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.