உங்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் இருக்கின்றனரா? அப்படியெனில் உங்களுக்கு மூளை பெரியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? மூளையின் அளவிற்கும் நண்பர்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான Robin Dunbar என்பவரின் தலைமையிலான குழுவினரே இந்த சுவாரஷ்யமான தகவலை கண்டறிந்துள்ளனர். முதுநிலை பட்டப்படிப்பு படித்த 40 பேரை இந்த ஆய்விற்கு உட்படுத்தினர். அவர்களின் சிந்திக்கும் திறன், சமூகத் தொடர்பு, மக்களிடம் பழகும் தன்மை போன்றவை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. பின்னர் இந்த 40 பேரின் மூளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் மூளை பெரியதாக உள்ள நபர்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் இருந்தது தெரியவந்தது. சமூகத்தில் அவர்கள் பழகும் தன்மை சிறப்பு வாய்ந்த்தாகவும் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஏராளமான நண்பர்கள் உள்ளவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன பெரிய மூளையா என்று? இனிமேல் நீங்களும் தயங்காமல் கேட்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.













கருத்துரையிடுக