Ad

Photobucket
 
வெள்ளி, 15 ஜூன், 2012

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?


சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் ஏற்படுவது இயல்புதான். அதை தகுந்த தருணம் பார்த்து தெரிவித்தால் வெற்றியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஒரு ரசாயான மாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி மிக அருகருகே இருக்க நேரிடுவதால் நட்பானது காதலாக கனியும். உடனே சட்டென்று காதலை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் பார்த்து எதிராளிக்கும் அந்த உணர்வு இருக்கிறதா என்பதை அறிந்து காதலை வெளிப்படுத்தலாம்.
நண்பர்களுக்கிடையே ஒத்த மனநிலை இருக்கும். நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான எண்ண அலைகள் இருக்கும் இதனால் கூட நட்பானது காதலாக மாறிவிடும். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி போன்றவை கூட மனதுக்குள் காதல் பூவை பூக்க வைக்கும்.

சந்தோசமோ, கவலையோ எதையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் உடனிருந்து கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம். அதேபோல் ஆண் பெண் இடையேயான உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்களும் நண்பர்களிடையே காதல் உருவாக காரணமாகிறது. எதுவாக இருந்தாலும் சரியான நேரம் பார்த்து அந்த காதலை வெளிப்படுத்துங்கள்.

பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.

ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், காதலை தைரியமாக சொல்லலாம்.

ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், ...இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்' என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது. உங்கள் நண்பன் உங்கள் வாழ்க்கைத் துணைவனாக வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நினைக்கும் பட்சத்தில் காதலை தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.