Ad

Photobucket
 
வியாழன், 26 ஜூலை, 2012

உதட்டில் ஏற்பட்ட பருவை அகற்ற டாக்டரிடம் போன பெண் பரிதாப சாவு

உதட்டில் இருந்த பருவை அகற்றுவதற்காக டாக்டரிடம் போன பெண், டாக்டர் இரண்டு ஊசி போட்டவுடன் மரணமடைந்தார். இதனால் டாக்டரைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அன்னை கிளினிக் என்ற பெயரில் டாக்டர் பாலாஜி என்பவர் கிளினிக் வைத்துள்ளார். அங்கு நேற்று இரவு ஒரு பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரது உதட்டில் பரு இருந்துள்ளது. இதை சரி செய்வதற்காக அவர் கிளினிக்குக்கு வந்ததாக தெரிகிறது. அங்கு டாக்டர் பாலாஜி, அப்பெண்ணுக்கு இரண்டு ஊசி போட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு டாக்டர் கூறியுள்ளார். பதறிப் போன உறவினர்கள் அருகில் இருந்த இன்னொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அப்பெண்ணைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.

 டாக்டர் பாலாஜி போட்ட ஊசியாலதான் தங்களது உறவுப் பெண் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டி கிளினிக் முன்பு போராட்டத்தில் குதித்தனர். இறந்த பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.



பதிவு பிடித்திருந்தால்  எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதாரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.