Ad

Photobucket
 
சனி, 21 ஜூலை, 2012

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள்கூட இப்படித்தானா! (பட இணைப்பு)

முகமூடிகளை அணிந்தபடி தலையிலிருந்து கால்வரை கறுப்பாக உடையணிந்தபடியும் எகிப்தின் பாரம்பரிய உடையுடனும் காணப்படுகின்றார்கள் இந்த செய்தி வாசிப்பவர்கள்.

இவர்கள் அந்நாட்டின் புதிதாகத் தொடங்கிய ஒளிபரப்பான மரியா தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தி வாசிப்பவர்களாவர்.

இந்நிகழ்வில் ஆண்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்திகளைக் கமெராக்களில் பதிவுசெய்பவர்கள்கூட பெண்களாகத்தான் உள்ளனர்.

இந்த ஊடகத்தின் முதலாவது ஒளிபரப்பு வெள்ளியன்று இடம்பெற்றிருந்தது. இந்நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற எழுச்சியின் பின்னர் ஏற்பட்ட மாற்றத்தில் ஒன்றாக இந்த ஒளிபரப்புக் காணப்படுகின்றது. இது பெரும்பாலான முஸ்லிம் கடும்போக்குவாதிகளின் விளைவினால் ஏற்பட்டுள்ளதெனலாம்.

இதன் முன்னருங்கூட எகிப்து ஒரு கொன்சவேற்றிவ் மற்றும் முஸ்லிம் சமூக நாடாகவே இருந்ததெனலாம். குறிப்பாகத் தொலைக்காட்சிகளிலும் கல்விச் சேவைகளிலும் பெண்கள் தமது முகங்களை மூடியபடி இருப்பதால் எப்போதுமே பிரித்துப் பார்க்கப்பட்டனர்.

மரியா TV இனை வழிநடத்தும் எல்-ஷீக்கா சபா றீஃபாய் என்பவர் இந்தத் தொலைக்காட்சியின் இருப்பு அந்நாட்டின் எழுச்சிக்குப் பின்னரும் துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னரும் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதென்பதைக் கூறகின்றதென்றார்.

முகமூடியை அணிந்தபடி செய்திகளை வாசிக்கும்போது உடல் மொழியைக் காட்டமுடியாதென்று தனக்குக் கூறப்பட்டதென்றும் எனினும் தான் தனது உணர்வுகளைக் குரலில் காட்டமுடியுமென்றும் தெரிவித்ததாக அவர் கூறினார்.

முழுமையான உடைகளை அணிந்தபடி தாம் தொலைக்காட்சியில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் கூறினார்.

கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற அபீர் ஷாகின் தொழில் தேடுவதற்குப் பெரிதும் சிரமப்பட்டார்.

ஆனால் தற்போது எகிப்தின் சமூகத்தின் பார்வையில் இந்த உடைகளை அணிபவர்கள் எவ்வாறு இருந்தார்களென்பதை மாற்றுமெனத் தான் நம்புவதாகக் கூறினார். இத்தொலைக்காட்சி முழுமையான பர்தா அணியும் பெண்களுக்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹொஸ்னி முபாரக்கின் காலத்திற்குப் பின்னர் புதிய சுதந்திர நாட்டில் பர்தா அணியும் பெண்கள் புதியதொரு இடத்தை சமூகத்திலும் அரசியலிலும் பிடித்துள்ளாரெனக் கூறலாம்.





0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.