Ad

Photobucket
 
சனி, 21 ஜூலை, 2012

வீடியோ கேமில் ஆபாச நடிகையாக சித்தரிக்கப்பட்ட இந்து கடவுள் காளி! (video)

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீடியோ கேம் நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள கேமில் இந்து கடவுளான காளியை அடிதடியில் ஈடுபடும் ஆபாச நடிகை போல சித்தரித்துள்ளனர். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுனமான ஹை-ரெஸ் ஸ்டுடியோஸ் புதிய ஆன்லைன் வீடியோ கேமை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மைட் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கேமில் இந்திய கடவுளான காளியை அடிதடியில் ஈடுபடும் ஆபாச நடிகை போன்று சித்தரித்துள்ளனர். மேலும் அந்த கேமில் வாமனன், அக்னி உள்பட இந்து கடவுள்கள் பலரையும் சித்தரித்துள்ளனர்.

கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளான காளியை ஆபாச நடிகையாக சித்தரித்துள்ளதற்கு உலக இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் அந்த கேமில் இருந்து இந்து கடவுள்கள் அதிலும் குறிப்பாக காளி கதாபாத்திரத்தை உடனே அகற்றுமாறு இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்து கடவுள்களை தவறான முறையில் சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்துக்களுக்கு உலக கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் புத்த மதத்தினர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



நெவாடாவைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தலைவர் சார்லஸ் டி டியூரண்ட், மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூத தலைவர் ரபாய் எலிசபெத் டபுள்யூ பேயர், நெவாடாவைச் சேர்ந்த புத்தமத தலைவர் ஃபில் பிரயன் ஆகியோர் காளியை தவறாக சித்தரித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த கேமில் வரும் காளி ஹாலிவுட் படங்களில் வரும் நடிகைகள் போன்று குறைவான ஆடையில் வருவது கோடிக்கணக்கான இந்துக்களை ஆத்திரம் அடையச் செய்துள்ளது.


0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.