லண்டன் ஒலிம்பிக் கோலாகலமாக முடிந்து விட்டது. இந்த போட்டிகள் குறித்த சைட் விவரங்கள் பல வெளியாகிய சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளன.
ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு செய்யப்பட்ட வசதிகள் பெரிய அளவில் புகார்களைக் கிளப்பவில்லையாம். மாறாக, வீரர்கள், வீராங்கனைகளுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாம் ஒலிம்பிக் கிராமம்.
ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 16,000 படுக்கைகள், 11,000 சோபாக்கள், 22,000 தலையணைகள், 28,000 துண்டுகள் போடப்பட்டிருந்ததாம்.
பிறகு, ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறைகள் வழங்கப்பட்டதாம். அதாவது ஒரு நாளைக்கு ஒன்று என்று. இதில் எத்தனை பேர் பயன்படுத்தினார்கள், எத்தனை பேர் பலூன் ஊதி விளையாடினார்கள் என்பது குறித்த புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை.
அப்புறம், ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 20.7 லட்சம் வாழைப்பழங்களை வீரர்களும், வீராங்கனைகளும் தின்று தீர்த்துள்ளனராம். அடேங்கப்பா...
சாப்பாடு மகா அமர்க்களமாக இருந்ததாம். ஒவ்வொரு கண்டத்திற்குமான உணவு வகைகளை பிரித்து வைத்திருந்தனர். அதை வீரர்கள், வீராங்கனைகள் பிரித்து மேய்ந்துள்ளனர். சில வீரர்களுக்கு சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லையாம். நம்ம ஊர் சுஷில் குமாருக்குக் கூட இறுதிப் போட்டிக்கு முன்பு வயிற்றுப் போக்காகி பலமுறை டாய்லெட்டுக்கும், ரூமுக்காக அலைந்துள்ளார். இதனால்தான் தங்கம் தவறிப் போய் வெள்ளியைப் பிடித்து வந்துள்ளார்.
செம சிறப்பாகத்தான் முடிந்துள்ளது லண்டன் ஒலிம்பிக்...!
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்













கருத்துரையிடுக