நெல்லை அருகே தென்னை மரத்தில் இளநீர் திருடச் சென்றவர் விடிய விடிய
மரத்தை விட்டு இறங்காமல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை படாதபாடு
படுத்தினார். உச்சி மரத்தில் ஏறி நின்று ‘உச்சாவும்’ அடித்தார். 9 மணி நேர
போராட்டத்துக்கு பிறகு, அவரை இறங்க வைத்த போலீசார் அவரிடம் விசாரித்து
வருகின்றனர்.
நெல்லை டவுன் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் மாடப்பன் 50. கூலி தொழிலாளி. இவருக்கு 2 மனைவி. மாடப்பன் அடிக்கடி குடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தார். மனைவிகள் சொல்லிப் பார்த்தும் மாடப்பன் கேட்பதாக இல்லை. வெறுத்துப் போன இரு மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர்.
குடும்ப செலவுக்கு பணம் தரவேண்டிய இம்சை இல்லை. கிடைக்கும் வேலையை செய்வது, கூலி பணத்துடன் நேராக டாஸ்மாக் போவது என உற்சாகமானார். வேலை இல்லாத நேரங்களில், ‘கட்டிங்’குக்காக சிறிய திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு, வழக்கம் போல போதை ஏற்றினார். மறுநாள் செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்தபடியே வந்த மாடப்பன் கண்ணில், முருகன் என்பவரின் தோப்பில் இருக்கும் தென்னைமரம் பட்டது. காய்த்து தொங்கும் இளநீர் காய்கள் அவருக்கு டாஸ்மாக் சரக்குகளை நினைவுபடுத்தின.
சுவர் ஏறி குதித்தவர் விறுவிறுவென மரத்தில் ஏறினார். இரவு நேரத்தில் யாரோ ஒருவர் மரத்தில் ஏறுவதை அப்பகுதியினர் பார்த்து சத்தம் போட்டனர். மரத்தின் கீழ் கூட்டம் கூடியது. ‘ஒரு இளநீர் குலைக்கு ஆசைப்பட்டு வந்தேன். கூட்டத்தின் கையில் சிக்கினால் கொலையா கொன்னுடுவாங்களே’ என்று அதிர்ந்தார் மாடப்பன். வேறு வழி தெரியாமல், இன்னும் மேலே ஏறி உச்சியில் பதுங்கினார். கீழே இருந்தவர்கள் இறங்க சொல்லியும் மாடப்பன் மசியவில்லை.
அங்கிருந்தபடியே கூட்டத்தை நோக்கி உச்சா அடித்தார். தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். ஏணி மூலம் மாடப்பனை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முரண்டுபிடித்த மாடப்பன், மரத்தின் காய்ந்த மட்டைகளை கீழே வீசினார். மட்டையில் தீ பற்ற வைத்தும் வீசினார். ‘ஃபயருக்கே ஃபயரா’ என்று ஷாக் ஆனார்கள் தீயணைப்பு வீரர்கள். சரமாரியாக இளநீர் காய்களை பறித்து மாடப்பன் வீசியதால் வீரர்கள் பின்வாங்கினர். போலீசுக்கும் தகவல் பறந்தது. பேட்டை எஸ்.ஐ. பழனிமுருகன் தலைமையில் போலீசார் வந்து, அவர்களும் இறக்குதல் வேட்டையில் இறங்கினர். போலீஸ் மீதும் இளநீர் தாக்குதல் நடத்தினார் மாடப்பன்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த கண்ணாமூச்சி இன்று காலை 6 மணி வரை நீடித்தது. பொழுது விடிந்ததும் போலீசார் வேறு டெக்னிக்கை கையாள திட்டமிட்டனர். ‘அடிக்க மாட்டோம், கேஸ் போடமாட்டோம், தைரியமாக இறங்கி வா’ என்று பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதை நம்பிய அவர் காலை 7 மணியளவில் இறங்கி வந்தார். அவரது கையில் பளபளவென அரிவாள் இருந்ததால் அனைவரும் சற்று தள்ளியே நின்றனர்.
மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்த எஸ்.ஐ. பழனிமுருகன், ‘ராத்திரி பூரா உன்னால தூக்கம் போச்சு. தொண்டை வறண்டு கிடக்கு. உன் கையாலேயே ஒரு இளநீ வெட்டு’ என்றார். குஷியான மாடப்பன் ஒன்று சீவிக் கொடுத்தார். அதை வாங்கும் சாக்கில், அரிவாளை லாவகமாக பறித்தனர் போலீசார். இதையடுத்து அவரை பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக