யப்பானிய இலத்திரனியல் நிறுவனம் iPhone மூலம் கட்டுப்படுத்தப்படும்
13அடி சுப்பர்-இயந்திர மனிதனை உருவாக்கியுள்ளது. ரோக்கியோவின் Suidobashi
Heavy Industry நிறுவனமே இதனை வெளிப்படுத்தியுள்ளது
ஆனால் நீங்கள் இதன் கட்டுப்பாட்டாளர் அறைக்குள் கைத்தொலைபேசியுடன் இருக்கும்போது சற்றுக் கவனமாக இருங்கள். தொலைபேசியுடன் பகிடிகள் விட்டுவிடாதீர்கள்.
'Kuratas' என்ற இந்த இயந்திர மனிதனில் எதிர்கால ஆயுதத் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு நிமிடத்தில் 6000 BB ரவைகளைச் சுடமுடியும்.
இதனை உள்ளிருக்கும் ஒருவர்மூலமோ அல்லது வெளியே இருந்து 3G உடன் தொடர்புள்ள எந்தவொரு கையடக்கத் தொலைபேசிமூலமோ கட்டுப்படுத்தலாம்.
இந்த இயந்திர மனிதன் 900,000 பவுண்களிற்கு விற்கப்படவுள்ளது. இதில் 30 இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளை இதன் கட்டுப்பாளரால் நகர்வுக் கட்டுப்படுத்தியைப் பயன்படுத்தி நகர்த்தமுடியும்.
இதன் சாம்பல் நிறத்தால் இதனை வாங்குபவர்கள் வெறுக்கவேண்டியதில்லை. இதன் வெளிப்பகுதியின் நிறத்தினை 16 நிறங்களில் மாற்றிப் பெறலாம். மேலதிகமாக 60 பவுண்கள் கொடுத்தால் இதில் ஒரு குவளை பிடிப்பியையும் வைத்துக்கொடுப்பார்கள்.
ரோக்கியோவின் நகரான Wonder Festival இன்போதே இது இந்நிறுவனத்தின் பொறியியலாளர்களான Wataru Yoshiz மற்றும் Kogoro Kurata மற்றும் கட்டுப்பாட்டாளராக இருந்த அன்னா ஆகியோரால் வெளிக்காட்டப்பட்டது.
இந்த அணியினர் 2010இன் பின்னர் இந்த இயந்திரமனிதனை உருவாக்கும் வேலைகளைச் செய்துவந்தனர்.
இந்த இயந்திர மனிதனால் எந்தவொரு இலக்கையும் தப்பிக்க விடமுடியாது. அதுபோல அதற்குள் இருப்பவர் சிரித்தால் போதும் அது BBகளைச் சுட்டுவிடும்.
சுடும்போது அதனைக் கட்டுப்படுத்துபவர் அதிகளவு சிரித்துவிட்டால் போச்சு. இதனால் ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது அவர்கள் சிரிப்பதைக் கட்டுப்படுத்தவேண்டுமென இதன் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்பாட்டாளர் உட்பட இது 4தொன் நிறை கொண்டதாகவும் 4 சக்கரங்களில் இலகுவாக மணிக்கு 6.5 மைல் வேகத்தில் நகர்வதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்



















கருத்துரையிடுக