Ad

Photobucket
 
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

நீல நிறத்தில் இன்று வானில் நிலவு தோன்றும்!

எப்போதாவது நிகழும் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் “ஒன்ஸ் இன் ப்ளூ மூன்” (நீல நிலாக் காலத்தில்) என்று குறிப்பிடுவது வழக்கம்.

அதாவது வானில் வெண்மையாகத் தோன்றும் நிலா நீல வண்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இத்தொடர் அமைந்துள்ளது.

அதே சமயம், இதுவும் வானியல் நிலைப்படி சரியாகவே அமைந்துள்ளது. அப்படி ஓர் அரிய நாள் இன்று வெள்ளிக்கிழமை (ஒகஸ்ட் 31) அமைகிறது.

இன்றைய வானில் இரவு தோன்றும் நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"ஒகஸ்ட் மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஒகஸ்ட் 2ம் திகதி முதல் முறையும், வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலா நீலமாகத் தோற்றமளிக்கும்.

வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்´´ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நீல நிலா 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி, இரவு 7.28 மணி வரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.


 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.