Ad

Photobucket
 
திங்கள், 13 ஆகஸ்ட், 2012

அடிக்கடி செல்லப் பெயரில் கொஞ்சுங்களேன் காதல் அதிகரிக்கும்!

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஒருவித தெய்வீக அனுபவம். காதலுக்காக மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பதும், காதலிப்பவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதும் அவர்களுக்காக ஒவ்வொரு நொடியும் உருகுவதும் காதலில் தவிர்க்கமுடியாதவை.
காதல் எல்லோருக்கும் கைகூடாது. காதலிப்பவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பார்கள். காதலில் விழுந்தவர்கள் தங்களின் காதலை தக்கவைத்துக்கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள்.
நேசத்தை புரியவையுங்கள்
உங்கள் காதலன் அல்லது காதலியின் மீது உங்களுக்கு அபரிமிதமான காதல் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ள முடியாது. அவ்வப்போது அன்பை உணர்த்துங்கள். உங்களவரை செல்லப்பெயரில் கொஞ்சுங்கள். அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். சின்னச் சின்ன ரொமான்ஸ் எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். காலையில் குட்மார்னிங், இரவில் குட் நைட் என அன்றைய விடியலும், இரவும் அவரோடுதான் என்பதை உணர்த்துங்கள். மெயிலில் காதல் படங்கள் என அனுப்பி அசத்தலாம்.
அடிக்கடி புகழுங்கள்
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்துவம் இருக்கும். அதை உணர்த்தும் வகையில் புகழுங்கள். உடை உடுத்தும் விதம், ஸ்டைல், மேக் அப் என்று எதையாவது கண்டுபிடித்து புகழுங்கள். அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்.
உடனே சமாதானமாகிவிடுங்கள்
போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களாக கட் பண்ண கூடாது..அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க. சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க.. விடாமல் ‘மிஸ் யூ’ மெசேஜ் அனுப்புங்கள் அது கோபத்தை கட்டுப்படுத்தும்.
அவ்வப்போது பரிசு கொடுங்கள்
அவங்களோட பிறந்தநாள், முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்.
அடிக்கடி பேசுங்கள்
அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்தது, அதான் வந்தேனு சொல்லுங்க. எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க. ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க. அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை. ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் ‘அதுதான் எனக்குத் தெரியுமே’னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க. அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து பேசாமல் கொஞ்சலாய் பேசுங்கள்.
நம்பிக்கை அளியுங்கள்
காதலில் ரொமான்ஸ் அவசியம்தான் அதேசமயம் நம்பிக்கை முக்கியம். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை கைவிட்டு விடமாட்டேன் என்றும், நீயில்லாமல் நானில்லை என்றும் தெரிவியுங்கள். என்றைக்கும் உன்னுடன் உயிராய் கலந்திருப்பேன் என்று உள்ளங்கை பிடித்து நம்பிக்கையுடன் சொல்லுங்கள். இந்த நம்பிக்கையான வார்த்தைகள் காதலை உயிர்ப்போடு வைத்திருக்கும்.


 இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.