Ad

Photobucket
 
வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு! கடல் கடந்து இலங்கை வரை வந்துள்ள நித்தியின் ஆச்சிரமம்!

“ சுவாமி நித்தியானந்தாதான் கடவுள். சுவாமியால் முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை. சுவாமி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சுத்தப் பொய். சுவாமிக்கு வயது 35. ஒரு வருடத்தில் மாத்திரம் பத்து மில்லியன் மக்களை சந்திக்கின்றார். ”

இவ்வாறு தெரிவித்து உள்ளார் மட்டக்களப்பில் திறக்கப்பட்டு உள்ள சுவாமி நித்தியானந்தா அறக் கட்டளை நிலையத்தின் பொறுப்பாளர் உமேஸ்.
உமேஸின் சொந்த இடம் யாழ்ப்பாணம். இந்தியாவில் நித்தியானந்தாவின் பாசறையில் வளர்ந்தவர். நித்தியானந்தாவின் அறக் கட்டளை நிலையம் கடந்த மாதங்களில் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

நித்தியானந்தாவின் அறக் கட்டளை நிலையம் இலங்கையில் அமைக்கப்பட்டு இருக்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தபோதே உமேஸ் இவ்வாறெல்லாம் தெரிவித்தார்.

“ இவர் மேற்படி அறக் கட்டளை நிலையம் அமைக்கப்பட்டு இருக்கின்ற நோக்கங்கள்,  எதிர்கால திட்டங்கள் ஆகியன குறித்து கூறிய விடயங்கள் மிகவும் சுவாரஷியமாக இருந்தன.

திபேத் நாட்டில் பல அழிவுகள் இடம்பெற்றன. ஆனால் திபேத் மக்கள் கலாசாரத்தை கை விடவில்லை. இலங்கைத் தமிழ் மக்களும் கடந்த கால யுத்தத்தால் பேரழிவுகளை எதிர்கொண்டார்கள். 

அத்துடன் கலாசார பிறழ்வுகளும் ஏற்பட்டு விட்டன. எனவே கலாசாரத்தை சரி வர பெண வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இம்மக்களுக்கு பல தேவைகள் இருந்து வருகின்றன. இத்தேவைகளை ஓரளவு என்றாலும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டு இருக்கின்ற கிராமங்களை மீளக் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்துக் கோவில்களை புனரமைத்தல், பிரமச்சரியத்தை உணர்த்துதல், கலாசாரம் ஆகியன எம்மால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற திட்டங்கள்.  இலங்கையில் வரும் காலத்தில் இன்னும் பல இடங்களிலும் அறக் கட்டளை நிலையங்கள் அமைக்க உள்ளோம். இலங்கை மக்களுக்காக 25 கோடி ரூபாய் நிதியை சுவாமி ஒதுக்கீடு செய்து உள்ளார். ”

நித்தியானந்தாவின் தீவிர பக்தர்களில் மார்புப் புற்று நோய் சத்திர சிகிச்சை நிபுணர் கே. ரி. சுந்தரேசனும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுடன் பேசினார்.







 இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.