Ad

Photobucket
 
வெள்ளி, 7 செப்டம்பர், 2012

முற்பிறப்பு தகவல்களை தெளிவாக கூறும் அதிசய சிறுவன்! (பட இணைப்பு)

காலியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவருக்கு அவருடைய முற்பிறப்பு ஞாபகத்தில் உள்ளது. சிறுவனின் பெயர் மஞ்சுள. கடந்த பிறப்பில் உடுகம கிராமத்தில் உதய கெலிம் என்கிற பெயரில் வாழ்ந்து இருக்கின்றார் என்று கூறுகின்றார் சிறுவன்.

உதய கெலிம் குறித்து சிறுவன் கூறுகின்ற தகவல்கள் அனைத்தும் நூறு சதவீதம் சரியாக உள்ளன. உதய கெலிம் என்பவர் மீன் வியாபாரி. செல்வந்தர். வாகனங்கள் பலவற்றை வைத்து இருந்திருக்கின்றார். சுமார் 11 வருடங்களுக்கு முன் வாகன விபத்து ஒன்றில் 35 வயதில் இறந்து போனார்.

சிறுவனின் கிராமம் உதய கெலிமின் கிராமத்துக்கு அருகில்தான் உள்ளது. சிறுவன் முற்பிறப்பை நினைவு கூர்ந்து சம்பவங்களை சொல்லி வந்து இருக்கின்றார். பத்து மாத குழந்தையாக இருந்தபோது இச்சிறுவனுக்கு விளையாட்டு கார்கள் மீது அதிக நாட்டம் காணப்பட்டு இருக்கின்றது. தனிமையில் இருக்கின்றபோது கடந்த பிறப்பைப் பற்றி சுயம் பேசி வந்திருக்கின்றது குழந்தை.


சிறிய வயது தொட்டு உடுகம கிராமத்தை பற்றியும் சுது நோனா என்பவரை பற்றியும் தரிந்து, ஹிமாலி என்பவர்கள் பற்றியும் சிறுவன் சொல்லி வந்திருக்கின்றார். கொழும்பு வாழ்க்கை பற்றி சொல்லி இருக்கின்றார்.உதய கெலிம் போல புகைப் பிடித்து நடித்துக் காண்பித்து இருக்கின்றார். இவரால் நன்றாக பாட முடிகின்றது. வாகன உதிரிப் பாகங்களை மிக இலேசாக அடையாளம் காண்கின்றார்.

ஒரு முறை சிறுவனை பெற்றோர் காலி வெளிச்ச வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆயினும் ஏற்கனவே இவ்வெளிச்ச வீட்டுக்கு வந்து பரிச்சயமானவர் போல நடந்து கொண்டார். இவர் இவ்வெளிச்ச வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அக்குவேறு ஆணி வேறாக அறிந்து வைத்திருக்கின்றார். உதய கெலிம் குறித்து அறிய முற்பட்டனர் சிறுவனின் பெற்றோர். பொலிஸில் சென்று விசாரித்தனர்.

சிறுவன் சொல்லி வந்தபடி 2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி வாகன விபத்து ஒன்று இடம்பெற்று உதய கெலிம் என்பவர் இறந்துதான் இருக்கின்றார் என்பதை பொலிஸ் ஆவணங்கள் உறுதிப்படுத்தின. உதய கெலிமினின் வீட்டை சிறுவனின் பெற்றோர் கண்டுபிடித்தனர். உதய கெலிமின் வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு சிறுவன் குறித்து தகவல் வழங்கப்பட்டது. உதய கெலிமின் வீட்டுக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து வந்தனர்.


ஏற்கனவே வீட்டுக்கு வந்து பரிச்சயமானவர் போல நடந்து கொண்டார். கால இடைவெளியில் வீட்டில் ஏற்பட்டு இருக்கக் கூடிய மாற்றங்களை அப்படியே சொன்னார். உதய கெலிமினின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மிக துல்லியமாக அடையாளம் காட்டினார். கடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். உதய கெலிமின் மறுபிறப்புத்தான் இச்சிறுவன் என்பதை உதய கெலிமின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.






இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.