இன்று, மற்றவரை விமர்சிக்க சிலர் உங்களை கருவியாக பயன்படுத்துவர். கவனம் தேவை. சிறிய வேலை ஒன்று அதிக சுமையாக மாறலாம். தொழில், வியாபாரம் சார்ந்த அனுகூலம் பாதுகாப்பது நல்லது. எதிர்ப்பார்த்ததை விட குறைந்த அளவில் பணம் கிடைக்கும். இல்லறத்துணையின் பணசேமிப்பு ஓரளவு உதவும். தியானம், தெய்வ வழிபாடு செய்து மனதில் நம்பிக்கை பெறுவீர்கள்.
ரிஷபம்:
இன்று, தேவையற்ற வகையில் சவால்களை ஏற்று செயல்பட எண்ணம் வளரும். நிதானமுடன் நடந்து கொள்வது நன்மை பெற உதவும். தொழில், வியாபார வளர்ச்சிப் பணியை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். பணவரவுக் கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உடல்நல ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கற்கலாம். ஒவ்வாத வாசனைப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.
மிதுனம்:
இன்று, அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். முக்கிய வீட்டு சாதனப்பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து பாராட்டு பெறுவர்.
கடகம்:
இன்று, உங்கள் மனதில் அன்பு எண்ணம் அதிகரிக்கும். எதிர் மனப்பாங்கு உள்ளவரும் சகஜமாக நட்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். சராசரி பணரவுடன் ஆதாய பணவரவும் கிடைக்கும், நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.உடலில், பிணி தொந்தரவு குறையும்.
சிம்மம்:
இன்று, உங்களிடம் மாறுபட்ட கருத்துகளுடன் பேசுபவரிடம் விலகிச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். பணவரவு குறைவதால், சேமிப்பு பணத்தை முக்கிய செலவுக்கு பயன்படுத்துவீர்கள். காலமுறை உணவுப் பழக்கம் பின்பற்றுவதால், உடல் நலம் சீராகும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி:
இன்று, உங்கள் பேச்சில் மனவிரக்தியின் தன்மை வெளிப்படலாம். பின் விளைவு உணர்ந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு குளறுபடி ஏற்படும். புதிய இனங்களில் பணச் செலவு அதிகரிக்கும். உறவினர்களின் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்கக் கூடாது. சீரான ஓய்வு உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
துலாம்:
இன்று, உங்கள் மனதில் உதித்த திட்டம் செயல் வடிவம் பெறும். அதிக அளவில் உழைப்பதற்கு தயாராவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சிறக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெற்றோர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்:
இன்று, உங்களுக்கு அறிமுகம் இல்லாத எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். கடின பணிகளில் அதிக தற்காப்பு அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். உரிய முறையில்பயன் படுத்துவதால், எதிர்ப்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவை நிறைவேற்ற தாராள பணச்செலவு செய்வீர்கள். உறவினர் ஆறுதல் தரும் வகையில் ஒரு செய்தி சொல்வார்.
தனுசு:
இன்று, உங்களைச்சுற்றி நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை கண்டு ரசிப்பீர்கள். அன்றாட பணிகள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டு. உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மகரம்:
இன்று, சம்பந்தமில்லாத வகையில் அவசரப் பணி ஒன்று ஏற்படலாம். கூடுதல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் சிறக்க சகபணி சார்ந்தவரின் உதவி உண்டு. பணவரவை விட செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். எதிர்ப்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகும்
கும்பம்:
இன்று, முக்கிய குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். லட்சியம் நிறைவேற முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி மனதில் உற்சாகம் பெறுவீர்கள்.
மீனம்:
இன்று, நண்பரின் உதவியால் மகிழ்ச்சி பெறுவீர்கள்.உண்மை சத்தியத்தின் மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். கூடுதல் சொத்து சேர்க்கை கிடைக்கும். புத்திரர் நல்லவிதமாக நடந்து பெருமை தேடித் தருவர்.













கருத்துரையிடுக