Ad

Photobucket
 
ஞாயிறு, 7 அக்டோபர், 2012

காதல் பண்றீங்களா? அப்ப கொஞ்சம் உஷாரா இருக்கலாமே!!!

காதல் மிகவும் புனிதமானது என்று அனைவரும் சொல்வார்கள். அத்தகைய காதல் எந்த நேரத்திலும் வரலாம். ஆனால் அவ்வாறு காதல் செய்யும் போது, காதலர்கள் தனிமையாக இருப்பதற்காக எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

அவ்வாறு தனிமையில் இருக்கும் போது, வாழ்க்கையைப் பற்றி தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அந்த தனிமை நீளும் போது, தவறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

காதல் செய்பவர்கள் தவறு செய்வது என்பது புதுமையானது அல்ல. ஆனால் அத்தகைய அழகான காதலில் இருவருக்குள் தவறுகள் ஏற்படாமல் இருந்தால், மிகவும் நல்லது. மேலும் அந்த வாழ்க்கையும் நன்றாக இருக்கும். தவறு செய்யக்கூடாது என்பதற்காக காதல் செய்பவர்கள் முத்தம் கூட கொடுத்துக் கொள்ளக்கூடாதா என்று கேட்கலாம். அது தவறல்ல தான். இருப்பினும், அதற்கும் ஒரு படி மேலே சென்று விட வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

இன்றைய காதலில் ஆண்களும் பெண்களும் விரைவில் அவசரப் படுகிறார்கள். இவ்வாறு அவசரப் பட்டால், அந்த காதலில் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். ஏனெனில் தவறு செய்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆர்வம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

அதிலும் காதல் செய்யும் போது கட்டுப்பாட்டுடன் எந்த தவறும் செய்யாமல், காத்திருந்து திருமணத்திற்கு பின் எதையும் செய்து பார்த்தால், அப்போது ஏற்படும் இன்பத்திற்கும், ஒரு வித கிக்கிற்கும் அளவே இருக்காது. மேலும் அதனால் அவர்களது காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடித்து, காதலில் வெற்றியான திருமணமும் செய்து விடலாம்.

ஆனால் அதுவே திருமணத்திற்கு முன்னரே, தவறு செய்து விட்டால், இருவருக்குள்ளும் ஒரு வித மனசஞ்சலம் ஏற்பட்டுவிடும். ஏன் சில சமயங்களில் போர் கூட அடித்துவிடும். அதனால் ஒருவருக்கு ஆசை ஏற்பட்டு மற்றவருக்கு ஆசை ஏற்படாமல் போய், அந்த நேரத்தில் சண்டைகள் எழுந்து, இந்த காரணத்திற்காக தேவையில்லாத சந்தேகம், கோபம் போன்றவை எழுந்து, உண்மையான காதலுக்கான மதிப்பை அது அழித்துவிடும்.

அதிலும் பெரும்பாலும் விரைவில் கிடைக்காத பொருளின் மீது அதிக ஆசை, ஆர்வம் போன்றவை இருக்கும். அதேப்போல் தான் காதலில் இருவரும் இணைவது என்பது விரைவில் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டும். அவ்வாறு கிடைத்துவிட்டால், பின்னர் எந்த ஒரு ஆசையும், ஆர்வமும் இல்லாமல் போய்விடும்.

 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.