Ad

Photobucket
 
வியாழன், 11 அக்டோபர், 2012

கடல் கன்னியின் தரிசனம் பெற்ற மட்டக்களப்பு மீனவர்! (வீடியோ)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த மிக நீண்ட அனுபவம் மற்றும் ஆற்றல் உடைய மூத்த மீனவர்களில் ஒருவர் சீனித்தம்பி. இவருக்கு வயது 71.

அன்றைய காலத்துக்கு மீன்பிடித் தொழிலுக்கும் இன்றைய காலத்து மீன்பிடித் தொழிலுக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கின்ற மாற்றங்கள், மாறுதல்கள் ஆகியன குறித்து ஊடகம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி வழங்கி உள்ளார்.

இவர் இப்பேட்டியில் மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்றையும் தந்து உள்ளார். கடல் கன்னிகள் பற்றியது இவரின் அதிர்ச்சித் தகவல். கடல் கன்னி ஒன்றை நேரில் கண்டார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார்.

கடல் கன்னிகள் உண்மையில் இருக்கின்றார்கள், இவர்கள் பெண்கள், மனிதர்களுக்கு இருக்கின்றமையை போல கைகள் இவற்றுக்கு உள்ளன, இடுப்புக்கு கீழ்தான் மீன் உருவம். ஆழ்கடலில் வசிக்கின்றனர்.

இளமைக் காலத்தில் ஒரு நாள் இரவு சக மீனவ நண்பர்களுடன் தொழிலுக்கு சென்று இருந்தபோது கடலில் கடல் கன்னி ஒருத்தியை காண முடிந்தது, நண்பர்களும் கண்டனர், கடல் கன்னி விலகிச் சென்று கொண்டிருந்தார் என்று இம்மீனவர் அழுத்தமாக சொல்லி இருக்கின்றார்.

இவரின் பேட்டி அடங்கிய காணொளிகளை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம்.






 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.