Ad

Photobucket
 
வியாழன், 11 அக்டோபர், 2012

தலைக்கு பூசிய டை காரணமாக பூதாகரமாக வீங்கிய பெண்ணின் முகம் (படங்கள்)

தலைமுடிக்கு பூசிய டை காரணமாக பெண்ணொருவரின் முகம் பூதாகரமாக வீக்கமடைந்துள்ளது, 32 வயதான Bournemouth, Dorset இல் வசிக்கும் Selma Jesus எனும் பெண் $5ற்கு வாங்கிய Clairol Nice n' Easy black டை மூலம் முடிக்கு பூசியுள்ளார்.

பூசிய சில நிமிடங்களுக்குள் முகத்தில் பாரிய வீக்கத்தை அவதானிக்க முடிந்தது. 999 இலக்கம் மூலம் அவசர உதவியை நாடிய பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும் உறவினர் தரப்பில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன

முதுமைக்கு அழகே அந்த நரைதான், அந்த கறுமத்தை மறைக்க பலர் யன்றுவருவதும் அதற்காக சில ஆயிரங்களை செலவழித்து வருவதும் இன்றைய தலைமுறைக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

கணவனின் முடி கறுப்பாக இருக்கிறதே என்று மனைவி டை அடிப்பதும், மனைவி அடிப்பதால் கணவனும் பூசிக்கொள்கிறார்கள். 70-80 தாண்டிய பின்னும் கறுத்த முடியுடன்தான் வலம் வருகிறார்கள்.

அதிலும் திருமணம் போன்ற நிகழ்வென்றால் சொல்லவே தேவையில்லை ஒரு வாரங்களுக்கு முன்னமே இந்த டை அடிக்கும் படலம் ஆரம்பமாகிடும். தமிழர் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்றாகிவிட்ட நிலையில் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கேட்டால் அடிக்கத்தான் வருகிறார்கள்.





 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.