Ad

Photobucket
 
வெள்ளி, 12 அக்டோபர், 2012

இலங்கையர்களின் தனித்துவ உணவு கொத்து ரொட்டி! (வீடியோ)

இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும்.

ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு.

ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்றெல்லாம் இன்னோரன்ன கொத்துக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டொல்பின் கொத்து என்று ஒரு வகை கொத்து தற்போது அறிமுகம் ஆகி வருகின்றது.

கொத்து ரொட்டி சாப்பிடுகின்றமைக்கு மிகவும் சுவையானதாகவும், உறைப்பானதாகவும் இருக்கும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மத்தியிலும் கொத்து பிரபலமாகி வருகின்றது. கொத்து தயாரிக்கின்றபோது எழுகின்ற சத்தம்கூட வித்தியாசமானதுதான். 









 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.