பாரதி கிஷான் சங்க மாநில துணைத் தலைவர் அய்யாக்கண்ணு. இவர் இன்று
(12.10.2012) மதியம் முசிறியில் இருந்து 100 பெண்களுடன் ஊர்வலமாக முசிறி
காவல்நிலையத்திற்கு வந்தார்.
அப்போது பாராளுமன்ற தேர்தல் குறித்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் சிவபதி தலைமையில் நடந்துகொண்டிருந்ததால், அந்த கூட்டத்திற்கு பாதுகாப்புக்காக முசிறி இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி சென்றிருந்தார்.
அப்போது, இன்ஸ்பெக்டர் செல்போனுக்கு சுமார் 100 பெண்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர் என்று ஒரு தகவல் வந்தது. பதறிப்போன இன்ஸ்பெக்டர் காவல்நிலையத்திற்கு விரைந்தார்.
அங்கு அய்யாக்கண்ணு தலைமையில், பெண்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், முசிறி பகுதியில் அதிக மின்வெட்டு ஏற்படுகிறது. மின் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. மின்சாரத்தையே காணவில்லை என கூறப்பட்டிருந்தது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த இன்ஸ்பெக்டர், முசிறி மின்சார செயற்பொறியாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின்சாரம் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். உரிய முறையில் நடவடிக்கை எடுத்து மின்வெட்டை குறையுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், காவல்நிலையதிற்கு வந்தவர்களிடம், மின்சார அலுவலகத்தில் பேசிவிட்டேன். மின்வெட்டு குறைந்துவிடும் என்று சமாதானம் செய்துள்ளார்.
ஆனால், புகார் கொடுக்க வந்தவர்களோ, புகாருக்கான ரசீதை கொடுத்தால்தான் போவோம் என்று பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியின்றி மின்சாரம் காணவில்லை என்ற புகாருக்கு, கண்டுபிடித்து தருவதைப்போல ரசீதை கொடுத்து அனுப்பியுள்ளார் முசிறி இன்ஸ்பெக்டர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக