ஆதீனத்தின் காலைப்பிடித்து நித்தி சீடர்கள் கதறல்
நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பிலிருந்து நீக்குவது என்று மதுரை ஆதீனம் முடிவெடுத்துவிட்டதனால் அவரது உயிருக்கும், மடத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்.
இதையடுத்து அவர், மடத்தில் தங்கியிருக்கும் நித்தி சீடர்களை வெளியேற்றக்கோரி முன்னதாக இன்று மாலை 8 மணியளவில் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இதனால், நித்தியின் தலைமை சீடர் ரிஷி தலைமையில் 10க்கும் மேற்பட்ட நித்தி சீடர்கள் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலில் விழுந்து, இன்று ஒருஇரவு மட்டும் பொருத்துக்கொள்ளுங்கள். நாளை பேசி சரி செய்துகொள்ளலாம் என்று கதறினார்கள்.
ஆனாலும் அருணகிரிநாதர் அதற்கு சம்மதிக்காததால், போலீசார் நித்தி சீடர்களை மதுரை ஆதீன மடத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன்: அருணகிரி வழங்கிய அதிரடி பேட்டி
நித்தியானந்தாவை நீக்கம் செய்த பிறகு மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார். இதன் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார்.
கேள்வி: நீத்தியானந்தாவை ஏன் நீக்கினீர்கள்?
பதில்: நீதிமன்றத்திற்கு தலைவணங்கி இப்போதுள்ள வழக்கு சூழ்நிலை கருதி நித்தியானவந்தாவை நீக்கினேன்.
மடத்திற்குள் இருந்த நித்தி சீடர்களை ஏன் உடனடியாக வெளியேற்றினீர்கள்?
பதில்: இன்று இரவுக்கு அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வெளியேற்றினேன்.
கேள்வி: பொறுப்பில் இருந்து நீக்கியதால் நித்தியானந்தா மிரட்டினாரா?
பதில்: என்னை மிரட்டவில்லை; மிரட்ட மாட்டார் என்று நினைக்கிறேன்.
கேள்வி: பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கியபின் அவர் தங்களை தொடர்புகொண்டாரா?
பதில்: நான் அவரை தொடர்புகொண்டேன். அவர் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கேள்வி: இதுவரை இரண்டு இளைய ஆதீனங்களை நீக்கியிருக்கிறீர்களே? இந்த முடிவும் நிரந்தமானதா?
பதில்: இந்த முடிவு நிரந்தமானதுதான்.
கேள்வி: நித்தியானந்தா நீக்கத்திற்கு பிறகு மற்ற ஆதீனங்கள் உங்களை தொடர்புகொண்டார்களா?
பதில்: இனிமேல்தான் தெரியும்.
கேள்வி: இந்த விசயம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பீர்களா?
பதில்: வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்
அலறி அடித்துக்கொண்டு மதுரைக்கு ஓடும் நித்தி: காரில் கதறி அழுகை
இளைய ஆதீனம் நித்தியானந்தாவை, அவரது செயல்களால் தொடர்ந்து வேதனையுற்று வந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர், இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நீக்குகிறேன் என அறிவித்துவிட்ட செய்தி கேட்டு அதிர்ந்து போனார் நித்தியானந்தா,.
இதனையடுத்து அலறி அடித்துக்கொண்டே அவர் காரில் ஏறிய நித்தியானந்தா, திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு காரில் விரைகிறார்.
இதேவேளை, காரில் கதறியழுது கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நித்தி சீடர்கள் மீது செருப்பு வீச்சு : மதுரை பதட்டம்
நித்தியானந்தாவின் சீடர்களை பொறுப்பிலிருந்து வெளியேற்றக் கோரி மதுரை ஆதினம் போலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து ஆதீனத்தின் மடத்திலிருந்த நித்தியானந்தாவின் சீடர்கள் வெளியேற்றும் நடவடிக்கையில் போலிஸார் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் நித்தியானந்தா சீடர்களை மடத்தில் இருந்து வெளியேற்றினர். சொரூபானந்தா, ரிஷி தலைமையில் 15க்கும் மேற்பட்ட ஆண், பெண் நித்தி சீடர்கள் வெளியேறினர்.
அப்போது அங்கு திரண்டு நின்றிருந்த பொதுமக்கள் அவர்கள் மீது செருப்புகளை வீசினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனே காவல்துறை அவர்களை பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள் </ div>













மக்கள் கோயில்களை விடுத்தது மடங்களை தேடி அலைவதின் பலன் இது.
வேறு என்ன சொல்ல.