Ad

Photobucket
 
சனி, 13 அக்டோபர், 2012

Gallery மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் நவீன ஆவிகள் ! (பட இணைப்பு)

இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்திதான். ஆனால் முற்றிலும் உண்மை. இறந்த மனிதன் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக அவருடைய நண்பர்களுடன் தொடர்பைப் பேணி வருகின்றார். இச்செய்தியை உலகின் பிரபல பத்திரிகைகள் பலவும் வெளியிட்டு இருக்கின்றன. இந்த மனிதனின் பெயர் Jack Froese. வயது 32. கடந்த வருடம் ஜூன் மாதம் திடீரென்று இறந்து விட்டார். இவர் இதய கோளாறால் பீடிக்கப்பட்டு இருந்தவர்.

ஆனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு இவரது மின்னஞ்சல் முகவரியில் இருந்து மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

இம்மின்னஞ்சல்கள் இவருக்கும் நண்பர்களுக்கும் இடையில் நடைபெற்று இருந்த தனிப்பட்ட சம்பாஷணைகளையும் உள்ளடக்கியனவாக உள்ளன. அத்துடன் தற்போதைய விடயங்களையும் உள்ளடக்கியனவாக உள்ளன.

எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றார் என்று நண்பர்களுக்கு எழுதி இருக்கின்றார். முதல் தடவை மின்னஞ்சலை பார்த்தபோது நண்பர்கள் பேரதிர்ச்சி அடைந்து விட்டனர்.

இறந்த மனிதனின் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது. எனவே இது ஒரு மோசடி வேலையாக இருக்காது என இறந்தவருக்கு நெருக்கமானவர்கள் விசுவாசிக்கின்றனர்.

நண்பர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல்கள் மூன்றாவது நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார்கள்.

இம்மின்னஞ்சல்கள் சில நண்பர்களுக்கு ஆறுதல் கொடுத்து இருக்கின்றன. சிலருக்கு சந்தோசத்தை கொடுத்து இருக்கின்றன. சிலரை குழப்பம் அடைய வைத்திருக்கின்றன. 






 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.