இன்று, நீங்கள் மாறுப்ட்ட கருத்து உள்ளவர்களிடம் எதிர்பேச்சு பேசாமல் விலகுவது நல்லது. மன அமைதியை பாதுகாப்பதால், செயல்கள் சீரான வகையில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடி சரி செய்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். உறவினர் வகையில் சீர்முறை செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். விலை மதிப்புள்ள பொருளை கவனமுடன் பயன்படுத்துவது நல்லது.
ரிஷபம்:
இன்று, எதிர்பார்த்த காரியம் வெற்றிச் செய்தி தரும். நண்பர், உறவினர்களிடம் சந்தோஷத்தை பகிர்நது கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசத்தில் மகிழ்வீர்கள்.
மிதுனம்:
இன்று, உங்களின் கடந்த கால சிரம சூழ்நிலைப்பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். முன்யோசனையுடன் செயல்படுவதால் பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றங்களை செயல்படுத்துவது அவசியமாகும். அளவான் பணவரவு கிடைக்கும். தவிர்க்க இயலாத வகையில் பணச்செலவு ஏற்படும். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்தி பணித்தரம் உயர்த்துவர்.
கடகம்:
இன்று, உங்களின் கடந்த கால உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும். உங்கள் செயல் திறனை பிறர் உணர்ந்து பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். கூடுதல் பணவரவு கிடைத்து குடும்பத் தேவை நிறைவேற்றுவீர்கள். புத்திரர் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். இஷ்ட செய்வ வழிபாடு நடத்துவீர்கள்.
சிம்மம்:
இன்று, உங்களைப்பற்றி நல்ல மதிப்பீடு சமூத்தில் உருவாகும். சிலரிடம் முன்னர் கேட்ட உதவி எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணியை திறம்பட நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். இயன்ற அளவில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.
கன்னி:
இன்று, உங்கள் மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். அன்றாட பணிகளை அதிக பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான மந்தநிலை மாறும். அளவான பணவரவு கிடைக்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணத்தை பயன்படுத்துவீர்கள். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.
துலாம்:
இன்று, சிறுசெயல் கூட உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை சரியான முறையில் செயல்பட உதவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மைகளை பாதுகாப்பது நல்லது. சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல்நல ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் நலன் விரும்புவர்களின் வாழ்த்து, உதவி கிடைக்கும் செயல்களில், புதிய யுக்தி பின்பற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். சராசரி பணவரவுடன் உபரி பணவருமானமும் பெறுவீர்கள். கூடுதல் சொத்து சேர்க்கை பெற அனுகூலம் உருவாகும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு:
இன்று, உங்கள் நண்பரால் சில நன்மை அடைந்து, நட்பின் பெருமையை உணருவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி எதிர்பார்த்த பதவி பெற அனுகூலம் வளரும்.
மகரம்:
இன்று, வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவு ஏற்படலாம். கூடுதல் கவனம் செயல் நிறைவேற உதவும். தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் அரசின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்றுவதால் நன்மை ஏற்படும். பணவரவுகளை சிக்கனமாக பயன்படுத்துவதால், தேவையற்ற பணக்கடன் பெறுவதை தவிர்க்கலாம். விலைமதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்கக் கூடாது. சுற்றுச் சூழ்நிலைகளால் நித்திரை கெடலாம்.
கும்பம்:
இன்று, உங்கள் மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்படலாம். நல்லோர்களின் ஆலோசனை நல்வழியில் செய்லபட ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது உடல் நலம் சீர்பெற உதவும்.
மீனம்:
இன்று, உங்கள் நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசுவீர்கள். நல்ல திர்வுக்கான ஆலோசனை கிடைத்து மனதில் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் தேடிய பொருள் கைவந்து சேரும். உத்தியோகஸ்தர்கள், பணி இலக்கு நிறைவேற்றி பாராட்டு, சலுகை பெறுவர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக