16 வயதான பெண்ணொருவர் கொடுத்த முத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற சிறுவன் ஒருவனின் உயிர் காப்பற்றப்பட்ட சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
Lio Wenjiu எனும் இப்பெண் தனது நாளாந்த வேலைக்காக சென்று கொண்டிருந்த போது கட்டிடமொன்றிற்கு அருகில் மக்கள் சலசலத்துக் கொண்டிருந்ததை கண்டாள், அருகில் சென்று பார்த்தபோது கட்டிடத்தின் உச்சியில் 11 வயதான சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயல்வதை கண்டு சட்டென்று அவனிருந்த மாடிக்கு விரைந்து சென்று, அங்கிருத்து பொலிசாருக்கு தகவல் அனுப்பினாள், அவனின் தற்கொலைக்கு காரணமறியாது தனது காதலன் என்றே சொல்லியிருந்தாள்.
சிறுவயது முதலே தாயாரின் கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகிய சிறுவன் தன் மீது அன்பு காட்ட யாருமில்லை என்ற விரக்தியிலே இந்த முடிவை எடுத்திருந்தான்.
அக்கணமே இவனின் மீது அன்பு செலுத்திய Lio Wenjiu .. உனக்கு அன்பு காட்ட நானிருக்கிறேன் என்று ஒரு முத்தத்தையும் வழங்கினாள், இருவரும் பாசத்தில் பிணைத்திருக்க அவனின் தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் கீழே அழைத்துவரப்பட்டனர்.
"அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்"
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக