Ad

Photobucket
 
சனி, 3 நவம்பர், 2012

(03.11.2012) இன்றைய நாள் எப்படி..! வாருங்கள் உங்கள் இராசிக்கான பலன்களை பார்க்கலாம்!

மேஷம்:
இன்று, உங்களின் லட்சியக் கனவு இனிதாக நிறைவேறும். சிறந்த செயல்களை செய்து சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். சராசரி பணவரவுடன் உபரி பணவரவும் கிடைக்கும். புத்திரம் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். நண்பர்களுடன் விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்:
இன்று, உங்களின் சிறு விஷயங்கள் கூட, தாமதம் ஆவதால், மனம் வருந்த நேரிடலாம். எதிர்கால நன்மைகளை நினைத்து, நம்பிக்கை வளர்ப்பது அவசியம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும். நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர் வகையில், பணச்செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.

மிதுனம்:
இன்று, உங்கள் பேச்சில் நேர்மை குணமும், வசீகரமும் நிறைந்திருக்கும். புதியவர்கள் உங்களை புரிந்து நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். ஆதாய பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும்.

கடகம்:
இன்று, உங்கள் வாழ்வில் நடந்த நன்மை, சிரமங்களை பிறரிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது. ஊக்கமுடன் செயல்படுவதால், அன்றாட பணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருகிற குறுக்கீடுகளை சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும்.

சிம்மம்:
இன்று, உங்களிடம் கடந்த காலத்தில் மாறுபட்ட குணத்துடன் பேசியவர்கள், அன்பு பாராட்டுகிற புதிய அனுகூலம் உருவாகும். இதனால், அன்றாட செயல்களில் கூடுதல் ஈடுபாடு கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், கூடுதல் கவுரவமும் கிடைக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுப செய்தி வரும்.

கன்னி:

இன்று, உங்களின் பேச்சில் மங்கத்தன்மை நிறைந்திருக்கும். இதனால், சான்றோர், ஆன்மிக நம்பிக்கை உள்ளவர் அன்புடன் பேசி மகிழ்வர். தொழில், வியாபாரம் வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறந்த பணிக்காக பாராட்டு பெறுவர்.

துலாம்:
இன்று, உங்களின் நற்செயல்களை உரிமையானவர்கள் பாராட்டவில்லையே என்ற மன வருத்தம் ஏற்பலாம். இருப்பினும், அன்றாட பணிகளின் பொறுப்பு உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கன செலவுக்களுக்கு பயன்படுத்துவீர்கள். சீரான ஓய்வு உடல் நலம் பெற உதவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

விருச்சிகம்:
இன்று, உங்களின் பேச்சில் வெளிப்படையான குணம் இருக்கும். உங்களின் நல்ல செயல்களை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவதால் மட்டுமே எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். கடனுக்கு கிடைக்கிறது என்று, அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

தனுசு:
இன்று, உங்கள் செயல்களில் புதிய உற்சாகம் ஏற்படும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தும். உபரிபண வருமானம் கிடைக்கும். புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். அரசியல்வாதிகள் விவகாரப் பேச்சுக்களை சமயோசிதமாக சரி செய்வர்.

மகரம்:

இன்று, உங்களின் ஒவ்வொரு செயலிலும் சமூக பொறுப்புணர்வு கலந்திருக்கம். நல்லோர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திட்டமிட்டபடி நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். நீண்டநாள் பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்த தர தேர்ச்சி பெறுவர்.

கும்பம்:
இன்று, உங்கள் முன் நிகழ்கிற சம்பவங்கள் மனதில் சிறுபதிப்பை ஏற்படுத்தலாம். வாழ்வியல் அனுபவங்களை எண்ணி, தைரியத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டு. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். நண்பருடன் வாகனப் பயணத்தில் மிதவேகம் நல்லது.

மீனம்:
இன்று, உங்கள் செயல்களில் கூடுதல் விவேகம் பின்பற்றுவது அவசியமாகும். இல்லறத்துணையின் ஆலோசனை உங்களின் மனக்குழப்பம் தீர உதவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூல பலன்கள் பாதுகாப்பது அவசியம். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், மருத்துவச் செலவு தவிர்க்கலாம். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதிபெற உதவும்.

இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்    
1 comments

One Response so far.

  1. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.