இன்று, நீங்கள் புதியவர் ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்வதில், கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு, முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரம் சீராக, கூடுதல் பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். தவிர்க்க முடியாத அளவில் அதிக பணச் செலவு உருவாகும். இல்லறத் துணையின் சேமிப்பு பணம் ஒரளவு பயன்படும்.
ரிஷபம்:
இன்று, உங்களின் எதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கடப்படுத்தலாம். அன்றாட நடைமுறைப்பணி சிறக்க, சிறு மாற்றங்களை பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது அவசியம். எதிர்பார்த்ததை விட குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உறவினர் வகையில் சீர்முறை செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பதால், உடல்நல ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
மிதுனம்:
இன்று, நீங்கள் கலகலப்பாக பேசி, பிறர் மனம் கவருவீர்கள். செயல்களில் வெற்றி பெறுவது எளிதாகும். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள், அரசு தொடர்பான உதவி பெற, அனுகூல காரணி பலம் பெறும்.
கடகம்:
இன்று, உங்கள் பேச்சில் தத்துவத்தின் சாயல் நிறைந்திருக்கும். சொந்த நலனை விட, அடுத்தவர் நலன் பாதுகாப்பதில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில், நல்ல முன்னேற்றம் பெற புதிய வழிமுறை உருவாகும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்ப கவுரவம் சிறப்பு பெற உறவினர் வகையில் தாராள பணச் செலவு செய்வீர்கள். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவுகளால் நித்திரை கெடலாம்.
சிம்மம்:
இன்று, உங்களைச் சார்ந்தவர்களிடம் கூடுதல் அன்பு, கருணை மனதுடன் பேசுவீர்கள். சமூகத்தில் இருக்கிற மதிப்பு, மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு அடைய, அதிகப்பணி புரிவீர்கள். சராசரி பண வரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை வளரும்.
கன்னி:
இன்று, நீங்கள் உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயம் பிறரிடம் பேசுவதால், சிரமம் வரலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரம் செழிக்க, புதிய யுக்தி பயன்படுத்துவது, முன்னேற்றம் பெற உதவும். சராசரி பணவரவு கிடைக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்பதால், உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் இருக்கும்.
துலாம்:
இன்று, உங்கள் மனதில் புதிய ஞானம் பிறக்கும். செயல்களில் கூடுதல் நன்மை பெற தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். தொழில், வியாபார அபிவிருத்தி பணி திருப்திகரமாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் தரும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வெளியூரிலிருந்து சுப செய்தி வந்து சேரும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை பெற அனுகூலம் உண்டு.
விருச்சிகம்:
இன்று, உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் கலந்திருக்கும். எதிர்வந்த சிரமம் மாறி அனுகூல பலன் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற மாற்றுத் திட்டம் செயல்படுத்துவீர்கள். உற்பத்தி, விற்பனை உயர்ந்து, உபரி பணவரவை பெற்றுத் தரும். பெற்றோரின் முக்கிய தேவை அறிந்து, தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு கிடைக்கும்.
தனுசு:
இன்று, உங்களின் அன்றாட பணி நிறைவேறுவதில், தாமதம் ஏற்படலாம். மன அமைதியை பாதுகாப்பதால், சில நன்மை பெறுவீர்கள். அதிக முயற்சியால், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். பணவரவை சிக்கன முறையில் பயன்படுத்துவதால் தேவையற்ற சிரமம் தவிர்க்கலாம். ஒவ்வாத அழகு சாதனப் பொருள் பயன்படுத்த வேண்டாம். சீரான ஓய்வு, உடல் நலம் காக்கும்.
மகரம்:
இன்று, உங்களின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். புதிய நுட்பங்களை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, சில நடைமுறை மாற்றம் செயல்படுத்துவீர்கள். நண்பருடன் வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவதால், பயணமுறை எளிதாகும். முக்கிய தேவைக்கு பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.
கும்பம்:
இன்று, உங்களுக்கு கடந்த காலத்தில் இடையூறு செய்தவரை பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். பெருந்தன்மையுடன் நடந்து, நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். சராசரி பணவரவுடன், உபரி பண வருமானமும் கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.
மீனம்:
இன்று, உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கெள்வீர்கள். எதிர்மனப்பாங்கு உள்ளளவர்களும், மறைமுகமாக உதவுகிற புதிய சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து, தாராள பணவரவை பெற்றுத்தரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை பெறுவீர்கள். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அரசு தொடர்பான நன்மை பெற அனுகூலம் உண்டாகும்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக