Ad

Photobucket
 
புதன், 7 நவம்பர், 2012

400 ரூபா பணத் தகராற்றில் ஒருவருக்கு கத்திக் குத்து! ஒரு வீடும் காரும் தீக்கிரை! கல்முனையில் சம்பவம்

கல்முனையில் 400 ரூபா கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒருவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கல்முனை - சாய்ந்தமருது, சாயிரா கல்லூரிய வீதியில் உள்ள அயலவர்கள் இருவர் 400 ரூபா கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளனர்.

இக் கொடுக்கல் வாங்கல் காரணமாக அவர்களுக்கிடையில் தகராறு ஏற்படவே இருவரும் கத்தியால் குத்தி சண்டையிட்டுள்ளனர்.

இதன் போது ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்கான நிலையில் கல்முனை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. கத்தியால் மற்றவரை குத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தகராறில் ஈடுபட்டு அயலவரை கத்தியால் குத்தியவருடைய வீடு, காரிற்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுள்ளனர்.

இதன்போது அவரது வீடு முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்    
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.