Ad

Photobucket
 
புதன், 7 நவம்பர், 2012

இப்படியான மனிதர்களும் இருந்திருக்கிறார்கள்! (அறிந்திருக்க வேண்டியவை)

அரசியல் வாதிகள் வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மக்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பதும் அதை வாங்கிக்கொண்டு அவரைத் தவிர மற்றவர்களுக்கு வாக்களிப்பதும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா எனப்படுபவை , இது தொடர்பாக ஆனந்த விகடனில் வெளியான குட்டிக் கதையொன்று

சீனாவில் அரசன் ஒருவன் தன் உயிர் காக்க உதவிய ஊழியன் ஒருவனைப் பாராட்டி சன்மானம் வழங்க எண்ணினான். ஆனால், அரசனின் கஷ்ட காலத்தில் கூடவே இருந்த அவனோ, அரசன் நல்ல நிலைக்கு வந்தவுடன் விலகிச் சென்றுவிட்டான். எப்படியாவது அவனைத் தேடிக் கண்டுபிடித்து சன்மானத்தை வழங்க முடிவு செய்த அரசன் ஆட்களை வைத்து அவனைத் தேடினான்.

ஆனால், நாடெங்கும் தேடியும் அந்த ஊழியன் கிடைக்கவில்லை. எவரும் நுழைய முடியாத காட்டுப் பகுதி ஒன்றில் தன் தாயுடன் அவன் ஒளிந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அவனை வெளியே வரவைக்கத் திட்டமிட்ட அரசன், காட்டுக்குத் தீ வைக்க உத்தரவிட்டான். காடு முழுக்க எரிந்து பொசுங்கும்வரை யாரும் வெளிவரவில்லை.

ஆனால், தீ முற்றிலும் அணைந்த பிறகு காட்டுக்குள் இரண்டு சடலங்களைக் கண்டெடுத்தனர். கை நீட்டி இலவசம் பெறக் கூசிய தாயும் மகனும் தப்பிக்க முற்படாமல் நெருப்புக்குத் தங்களை இரையாக்கிக்கொண்டார்கள். கலங்கிப்போன அரசன், அந்த ஊழியனின் மரணத்தைத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான். அதுவே 'கிங்மிங்’ திருவிழாவாக சீனாவில் கொண்டாடப்படுகிறது.

அங்கே அப்படி.. இங்கே நாம்?''


இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்  
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.